Asianet News TamilAsianet News Tamil

ஓநாய் புத்தியை காட்டும் ரத்த வெறிபிடித்த சீனா..!! எல்லையில், அசராத இந்தியா..!!

எல்லையில் இருந்து சீனா முற்றிலுமாக ராணுவத்தைத் திரும்பப் பெறும் வரை, இந்திய ராணுவம் பின்வாங்கப் போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

china troops still in indo-china border
Author
Delhi, First Published Jun 11, 2020, 2:46 PM IST

இந்திய-சீன எல்லையிலிருந்து, சீன படைகள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கியதாக செய்தி வெளியான நிலையில், கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் எல்லையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனையடுத்து சீன ராணுவத்திற்கு இணையாக இந்தியாவும் எல்லையில் படைகளை நிலைநிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்திய- சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, அதாவது, கடந்த மே 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் எல்லையில் இரு வேறு இடங்களில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உள்ளூர் மட்டத்திலான அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் பிரச்சனை தீர்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென மே 22-ஆம் தேதி பாங்கொங் த்சோ பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சீன எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதாக கூறிய சீனா அங்கு ஏராளமான படைகளை குவிக்க தொடங்கியது. கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் அது குவித்தது. அதனையடுத்து தனது ரோந்து பணிகளுக்கு சீனா இடையூறு ஏற்படுத்துவதாக தெரிவித்த இந்தியா சீன ராணுவத்திற்கு இணையாக எல்லையில் படைகளைக் குவித்தது.

china troops still in indo-china border

உடன் ஏராளமான ராணுவத் தளவாடங்களையும் எல்லை நோக்கி நகர்த்தத் தொடங்கியது, இதனால் இருநாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதையடுத்து பிரச்சனைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடிவு செய்ததுடன், கடந்த புதன்கிழமை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.  சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அந்த பேச்சுவார்த்தை நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பேச்சுவார்த்தை எங்கு நடந்தது என்ற தெளிவான தகவல் இல்லை, ஆனாலும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடரும் என்றும், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சீன படைகள் பின் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின, அதாவது படைகள் பின் வாங்கினாலும் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் இந்திய கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சீனத்துருப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவமும் தயாராக உள்ளதுடன், இந்திய தரப்பில் 10 முதல் 12 ஆயிரம் வீரர்கள் எல்ஐசி பகுதியை யொட்டி நிறுத்தப்பட்டுள்ளனர். 

china troops still in indo-china border

எல்லையில் இருந்து சீனா முற்றிலுமாக ராணுவத்தைத் திரும்பப் பெறும் வரை, இந்திய ராணுவம் பின்வாங்கப் போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் இதில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. கர்னல், பிரிகேடியர் மற்றும் மேஜர் ஜெனரல் உட்பட சீனாவுடன் பல நிலைகளில் தொடர்ந்து  பேச்சுவார்த்தைகள் இருக்குமென்றும் கூறப்படுகிறது. பேட்ரோலிங் பாயிண்ட் 14 , பேட்ரோலிங் பாயிண்ட் 15, மற்றும் 16 ஆகியவற்றில் பதற்றத்தை குறைக்க  இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும், கடந்த புதன்கிழமை நடைபெற்ற உரையாடலில் இதற்கு  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஜூன்-6 ஆம் தேதி நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றாலும், எல்லையில் சீன ராணுவத்தின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை எனக் கூறப்படுகிறது. தற்போது  விரல் 4 பகுதியை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், பாங்கொங்  த்சோ ஏரியின் விளிம்பில் உள்ள விரல் 1 முதல் விரல் 8 வரையிலான அனைத்து பகுதிகளும் இந்தியாவுக்குச் சொந்தமானது என இந்திய அரசு கூறிவருகிறது. அதோடு பாங்கொங் த்சோ ஏரிக்கு அருகில் உள்ள விரல் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்டு  சாலை அமைக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள தர்புக்- ஷியோக்-தவுலத் பேக் ஓல்டி,  இணைப்புச் சாலையை நிர்மாணிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே இந்த இரு விவகாரத்திலும் தீர்வு எட்டப்படும் வரை எல்லையிலிருந்து இருநாடுகளும் படைகளை திரும்பப் பெறாது  என கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios