ராஜதந்திர அஸ்திரத்தை கையிலெடுத்த மோடி..!! எல்லையில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்..!!
இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளவும், பல்வேறு பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து நாளை இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளநிலையில் கால்வான் பள்ளத்தாக்கு பகுதி, பாங்கொங் த்சோ ஏரி மற்றும் விரல் பகுதி உள்ளிட்ட இடங்களிலிருந்து சீனா ராணுவம் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்லைப் பிரச்சினையை இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் படைகள் பின்வாங்கியுள்ளன. இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்துவரும் நிலையில், கடந்த மே-5 ஆம் தேதி, பாங்கொங் த்சோ பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதே போன்ற சம்பவம் கடந்த மே-9 ஆம் தேதி வடக்கு சிக்கிம் பகுதியான நகுலா பாஸில் நடைபெற்றது. அதில் இரு நாட்டி ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். அதைத்தொடர்ந்து லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்தது.
அதுமட்டுமின்றி இந்திய ராணுவ வீரர்களின் ரோந்து பணிக்கு இடையூறு விளைவிப்பதாக கூறிய இந்தியாவும் பதிலுக்கு எல்லையில் படைகளையும், போர் தளவாடங்களையும் குவித்தது. இதனால் பாங்கொங் த்சோ ஏரி பகுதி, கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. எல்லை பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் ஏற்கனவே 12 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், அதில் எதிலும் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதற்கிடையில் அமெரிக்கா சமரசம் செய்ய முன்வந்தது, ஆனால் இந்தியா-சீனா இருநாடுகளும் அமெரிக்காவின் அறிவிப்பை ஏற்க மறுத்துவிட்டன. எனவே இரு நாடுகளும் எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள முடிவு செய்ததையடுத்து ஜூன்-6 ஆம் தேதி, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது அதில். லே-வை தளமாகக் கொண்ட 14 கார்ப்ஸின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் திபெத் இராணுவ மாவட்டத் தளபதி மேஜ் ஜெனரல் லியு லின் ஆகியோர் சனிக்கிழமை விரிவான கூட்டத்தை நடத்தினர்.
அதில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளவும், பல்வேறு பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நாளை(புதன்கிழமை) கிழக்கு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற உள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டதையடுத்து, கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கொங் த்சோ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீன ராணுவம் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கியுள்ளது. அதேபோல் தளவாடங்களையும் வெளியேற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கிழக்கு லடாக்கில் பல்வேறு பகுதியில் சீன ராணுவம் பின்வாங்கி வருவது குறிப்பிடதக்கது.