சீனாவின் கதவுகள் திறந்தே இருக்கிறது..!! ஜென்டில் மேன் வேஷம் போடும் ஜி ஜின் பிங்..!!
ஆனால் சர்வதேச விசாரணை என்ற பெயரில் எந்த குழுவையும் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில் வைரஸ் தோற்றம் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்கு சீனா தயாராகவே இருக்கிறது என பெர்லினுக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார் . உலக அளவில் மக்களின் உயிராதாரம், வாழ்வாதாரம் பொருளாதாரம் என அனைத்தையும் ஈவு இரக்கமின்றி கொரோனா வைரஸ் வேட்டையாடி வரும் நிலையில் , அவர் இவ்வாறு கூறியுள்ளதாக ஜெர்மன் நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது , சுமார் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளைவிட அமெரிக்காவிலேயே இந்த வைரஸ் பாதிப்பு மிககடுமையாக உள்ளது . அங்கு மட்டும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டி உள்ளது . இதுவரையில் 77 ஆயிரம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் .
அதையடுத்து ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, தற்போது அந்த பட்டியலில் பிரிட்டன் ரஷ்யா போன்ற நாடுகளும் இடம்பிடித்துள்ளன , இந்நிலையில் ஒட்டு மொத்த நாடுகளின் ஆற்றாமையும் , இயலாமையும் வைரசின் மூலமான சீனாவின் மீது பெருங்கோபமாக வெடித்துள்ளது . ஆம் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் சீனாவையே குற்றஞ்சாட்டுகின்றன . உலகம் இந்த அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதற்கு சீனாவே காரணம் என அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜெர்மனி உள்ளிட்ட தோழமை நாடுகள் பகிரங்கமாகவே புகார் கூறி வருகின்றனர். ஜெர்மன் அதற்கும் ஒரு படி மேலே போய் தங்கள் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனா 1.30 பில்லியன் யூரேவை இழப்பீடாக தரவேண்டுமென கோரியுள்ளது, ஆஸ்திரேலியாவோ சீனா மீது ஒரு சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது . இது ஒட்டு மொத்த சீனாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவோ இந்த வைரசுக்கு சீனா தான் சீனா மட்டுமே காரணம் அந்நாட்டில் உள்ள வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்தது அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் நிறைய உள்ளது என தொடர்ந்து சீனாவின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே வருகிறது , இதனால் செய்வதறியாது திகைத்து வரும் சீனா இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது . அதே நேரத்தில் அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் , வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து ஒரு சர்வதேச வல்லுநர் குழு சீனாவுக்குச் சென்று ஆராய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே உண்மை உலகிற்கு தெரியவரும் என சீனாவுக்கு எதிராக அடுத்த வெடி குண்டை பற்ற வைத்துள்ளனர், ஆனால் சர்வதேச விசாரணை என்ற பெயரில் எந்த குழுவையும் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆனாலும் சீனா மீதான குற்றச்சாட்டு தொடர்கதையாகி வரும் நிலையில் பெர்லினுக்கான சீன தூதர் " வு கென் " ஜெர்மன் நாட்டு பத்திரிகையான டெர் ஸ்பீகல் என்ற பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார் அதில் , கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விசாரணை வேண்டும் என கோரியுள்ளனர் , நாங்கள் ஒரு சர்வதேச விசாரணைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம் , சீனா அதற்கு எப்போதும் கதவைத் திறந்தே வைத்துள்ளது , நாங்கள் அந்த விஞ்ஞானிகள் மத்தியில் எங்கள் ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் , ஆனால் சீனா மீது எந்த ஆதாரமும் இன்றி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதனடிப்படையில் ஒரு சர்வதேச விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கும் முயற்சிகளை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம் என " வு கென் " திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .