வாயிலும், வயிற்றிலும் அடித்து அலறும் சீனா... வைரஸை அனுப்பி பலத்த அடி கொடுத்த இந்தியா..!

தன் நாட்டில் மட்டுமல்ல தங்கள் நட்பு நாடுகளான நேபாளம், பாகிஸ்தானிலும் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக சொல்லி கொண்டிருக்கின்றது.

China screaming in the mouth and stomach ... India sent a strong blow to the virus

சீனா முன்பெல்லாம் மிரட்டி கொண்டிருக்கும். இப்பொழுது அலற ஆரம்பித்து இருக்கிறது. இந்தியாவின் இரு யானைகள் தங்கள் வலையமைப்பினை நாசம் செய்து உள்ளே புகுந்து தகவல்களை திருடி செல்வதாக புலம்பி கொண்டிருக்கின்றது சீனா. ஆம், சீன சிஸ்டம் ஹாக் செய்யபட்டு தகவல்கள் எடுக்கபடுகின்றன.China screaming in the mouth and stomach ... India sent a strong blow to the virus

இதற்கு ட்ரோஜன் ஹார்ஸ் எனப்படும் குதிரை வைரஸ் போல, யூ ஷியான் மற்றும் பாய் ஷியான் என இரு வைரஸ்கள் சீனாவுக்கு வந்து தகவலை திருடுவதாக குற்றம் சாட்டுகின்றது சீனா. யூ ஷியான் என்றால் அவர்கள் மொழியில் குட்டியானை, பாய் ஷியான் என்றால் வெள்ளை யானை. இந்த யானைகள் சீனாவின் ராணுவம் மற்றும் இதர முக்கிய தளங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லும் சீனா, தன் நாட்டில் மட்டுமல்ல தங்கள் நட்பு நாடுகளான நேபாளம், பாகிஸ்தானிலும் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக சொல்லி கொண்டிருக்கின்றது.

சீனாவின் குளோபல் டைம்ஸ் வழக்கமான தன் போர்பரணியில் இருந்து மாறி இம்முறை வீடியோ கேம் கதை கூட சொல்லாமல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டார்கள். ஏதோ பெரியதாக நடந்திருக்கின்றது என்பது மட்டும் தெரிகின்றது. இந்திய தரப்பு அடித்து ஆடும் காரியத்தில் இறங்கிவிட்டது.

China screaming in the mouth and stomach ... India sent a strong blow to the virus

பொதுவாக சீனாதான் சார்ஸ், கொரோனா வைரஸ் முதல் இம்மாதிரி கணிணி வைரஸ்கள் வரை பரப்பி உலக நாடுகளை அச்சுறுத்தும். ஆனால் இம்முறை இந்தியா மிக சரியான அடியினை செய்திருக்கின்றது. சீனா வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு, இந்தியா இம்மாதிரி காரியங்களை நிறுத்தி கொள்ளவேண்டும், எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு என சொல்லி கொண்டிருக்கின்றது.

இதையும் படியுங்கள்:- அடங்க மாட்றாங்களே... சூர்யாவுடன் இணையும் இயக்குநர் பா.ரஞ்சித்... படு பயங்கர சர்ச்சை கதை..!

நிச்சயம் அவர்கள் பொறுமைக்கு எல்லை உண்டுதான், ஆனால் தைவான் முதல் எல்லா விவகாரத்திலும் அவர்கள் பொறுமை அனுமன் வால் போல் நீண்டு கொண்டே செல்கின்றதே அன்றி அடிமுடி காண்பவர் யாருமில்லை. அவர்கள் பொறுமையின் முடிவு அவர்களுக்கே தெரியவில்லை.
இதனால் இன்னும் இந்திய தாக்குதல் தொடர்ந்தாலும் அவர்கள் பொறுமை நீண்டு கொண்டேதான் செல்லும் போலிருக்கின்றது. சீனா கடும் கொந்தளிப்பினை வெளியிட்டாலும் இந்தியா வாயே திறக்கவில்லை. இந்தியாவின் பதில் இப்படி இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:- இருளர் பெண்கள் 4 பேரை காட்டுக்குள் காம வேட்டையாடிய போலீஸார்... சைலேந்திரபாபுவுக்கு ஃபளாஷ்பேக் சொல்லும் ராமதாஸ்

"நேருவின் சகோதரர்களே, உலகுக்கு பறவை காய்ச்சல், சார்ஸ், மெர்ஸ், கொரோனா என எல்லா வகை கிருமியுடன் கணிணி வைரஸ்களை பரப்புவது யார் என உலகுக்கே தெரியும். இந்தியர்களின் கணிணி அறிவினை உங்கள் கணிணியில் ஊடுருவித்தான் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை"China screaming in the mouth and stomach ... India sent a strong blow to the virus

ஆனாலும் எதற்கும் வாய்திறக்கா டிராகன்களையே அலற வைத்திருக்கின்றது என்றால் இந்திய யானைகளின் மிதி பலமாகத்தான் இருக்கும் போல. விஷயம் சொல்வது ஒன்றுதான், சீனர்களுக்கு "கும்கி" என இந்தியாவில் அழைக்கபடும் பழக்கபட்ட யானை பெயர் தெரியவில்லை. தெரிந்தால் இந்த வைரஸுக்கு அந்த பெயரையல்லாவா சூட்டி இருப்பார்கள்? முதலை வாயில் சீனாவின் கால் மாட்டிக் கொண்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios