இன்று உலகத்தில் கொரோனா வைரஸ் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு சீனாதான் மிக்கிய காரணம் என டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்தக் கட்டுரை சர்வதேச ரீதியான பார்வையில் அமைந்திருக்கிறது. சீனாவில் இழைக்கப்பட்ட தவறுகள் என்ன? சில சரியான தகவல் என்ன? என இரண்டு தரப்பிலான வாதங்கள் அவருடைய கட்டுரையில் வெளியாகி இருக்கின்றன.

முதலில் சீனா இழைத்த தவறு அந்த நாட்டில் என்ன நடைபெற்றது? நடைபெறுகின்றது என்கிற விவகாரங்களை அந்த நாட்டில் இருக்கின்ற ஊடகங்கள் இன்றைய உலக நாட்டு கூடங்களுக்கு பரிமாறிக் கொள்ள முடியாத அளவிற்கு ஊடகங்களுடைய கழுத்தை சீனா இரும்புக்கரம் கொண்டு நெரித்தது. இதனால், சரியான தகவல்கள் உலகநாடுகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

இது அரசியல், சுகாதாரம், உயிர் மீதான் விளையாட்டு. இதை தடுத்து இருக்க கூடாது. இரண்டாவதாக சீனாவில் செப்டம்பர் மாதமே கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதை சீனாவிற்கு எடுத்துரைத்த மருத்துவர்கள் அடக்கி வைக்கப் பட்டனர். அவருடைய தகவல் வெளியே தெரிய விடாமல் சீனா தடுத்தது. இதனால், இந்த விவகாரத்தை முற்றும் முழுவதுமாக சீனா இரும்புதிரை கொண்டு மறைத்து விட்டது. ஆனால், இதனுடைய பாரதூர தன்மையும் சீனாவில் நடைபெற்று கொண்டு இருக்கின்ற நிகழ்வுகளும் உலக நாடுகளுக்கு தெரியாமல் போய்விட்டன.

 இதனால், உலக மக்களுக்கு சீனாவில் என்ன நடைபெறுகிறது? நோய் தொற்று வரப்போகிறது என்பது தெரியாமல் போய்விட்டது. உதாரணமாக சுமத்ராவில் சுனாமி ஏற்பட்டு இலங்கையில் முதல் இந்தியா வரை பாதித்த பொழுது சுனாமி சுமத்ரா தீவில் ஏற்பட்டுவிட்டது என்பதை சரியாக கண்டுபிடித்து இருந்தால் மக்கள் தயாராகி தங்களை காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள். அதைப்போலத்தான் சீனாவில் ஏற்பட்ட இந்த கொரோனா  பாதிப்பை சரியாக, உண்மையாக சீனா ஊடகங்கள் வழியாக தெரியப்படுத்தி இருந்தால் இருட்டடிப்பு செய்யாமல் உண்மையான விஷயங்களை எடுத்து வைத்திருந்தால் இன்று உலகம் முழுவதும் இவ்வளவு பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்காது. 

உலகத்தில் தயாராக இருக்கக்கூடிய மருத்துவத் துறையை விட உரிய விஷயம் பொங்கி வருவதற்கு காரணம் விவகாரத்தை அழுத்தி பொங்க வைத்து அழுத்தமாக உந்தித் தள்ளி குரல்வளையை வைத்திருக்கிறது சீனா. 

தனது நாட்டு ஊடகவியலாளர்களை மட்டும்தான் சீனா தடுத்தது என்றால் மாற்று நாட்டு ஊடகவியலாளர்கள் சீனாவில் இருந்து பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று ஊடக நிறுவனங்களை அங்கிருந்து நாடு கடத்தினார்கள். இதுதான் உலகத்திற்கு இப்போது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், டென்மார்க்கை எடுத்துக்கொண்டால் இந்த விவகாரத்தில் அரசியல் இல்லை. ஆளும்கட்சி -எதிர்க்கட்சி என்கிற பேதமில்லாமல் பணியாற்றுகிற காரணத்தினால் உடனடியாக டென்மார்க்கின் எல்லையை மூட செய்தோம். டென் மார்க் தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தனது நாட்டு எல்லையை முதன்முறையாக மூடியது. டென்மார்க் தான் கொரோனா உள்ளே வரக்கூடாது என்பதைத்தடுத்த முதல் நாடாக இருக்கிறது.

 
கொரோனாவிற்கு நாடு கிடையாது. கொரோனா முழு உலகத்திற்கும் பொதுவானதே. எனவே உலகம் தன்னை நாடுகளாக பிளவுபடுத்தி, தனக்குள் சித்தாந்தங்களை, கட்டுப்பாடுகளை உருவாக்கி, மோதி -பிளவுபட்டு நிற்கிற நிலையில் கொரோனா விரைவாக அவர்களை வெற்றி பெற்று விடுகிறது. சீனாவின் மற்றொரு பக்கத்தை அவர் கூறும்போது,’’ சீனா ஒரு கம்யூனிச நாடு. சர்வாதிகார நாடு. அந்த நாட்டில் அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கலாம்.

வன்முறையான நடவடிக்கைகளை எடுத்து சீனா அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அடுத்த கட்டமாக சீனாவின் நடவடிக்கைகள் ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பூகம்பமாக வெடிக்கப் போகிறது. ஆப்ரிக்கு நாடுகளில் அதிக வியாபாரங்களை செய்வதும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிக ஆயுதங்களை விற்பதும் சீனாதான். எனவே ஆப்பிரிக்காவை காப்பாற்ற வேண்டிய பாதி பொறுப்பு சீனாவிற்கு இருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.