Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..!! ரத்தம் கொதிக்கும் சீனா..!!

இந்நிலையில் பெய்ஜிங்  இந்தியாவிலுள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் மூலம் மோடியின் கருத்துக்கு விரிவான பதிலை அளித்துள்ளது,  அதில் சீனாவை விரிவாக வாதியாக பார்ப்பது ஆதாரமற்றது.

china replay modi speech about china in lay
Author
Delhi, First Published Jul 3, 2020, 8:26 PM IST

எல்லை விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது எனவும், இது வளர்ச்சிக்கான காலம் எனவும் பிரதமர் மோடி சீனாவை விமர்சித்த நிலையில், சீனா அதற்கு உடனடி பதில் அளித்துள்ளது. சீனா ஒரு  விரிவாக்கவாத நாடு என்று கூறுவது ஆதாரமற்றது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் அந்நாடு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில்  சீனா உரிமை கொண்டாடும் இந்திய பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் சீன ராணுவமும் எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்ற அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. 

china replay modi speech about china in lay

இந்நிலையில் இன்று காலை திடீரென இந்திய பிரதமர் மோடி லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டார், தரை மட்டத்திலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் இருக்கும் லே பகுதியில் உள்ள நீமுவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்,  பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், தரைப்படை தளபதி எம்.எம் நரவானே  ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி உற்சாகமூட்டும் வகையில் உரையாடினார். அப்போது பேசிய அவர், விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது.  இப்போது இருப்பது வளர்ச்சிக்கான நேரம். வேகமாக மாறி வரும் காலங்களில் பரிணாமவாதம் மட்டுமே மிகப் பொருத்தமானதாக இருக்கும். நெருக்கடி நேரத்திலும் வளர்ச்சிக்கு  வாய்ப்புகள் உள்ளது. வளர்ச்சியே எதிர்காலத்தின் அடிப்படையாகவும் உள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எல்லை விரிவாக்கம் மனித குலத்திற்கு மிகவும் தீங்கு விளைவித்தது. மனிதநேயத்தை அது அழித்தொழித்தது. விரிவாக்கத்தின் வெற்றி எப்போதும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. 

china replay modi speech about china in lay

இப்போது உலகம் முழுவதும் விரிவாக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பப்படுகிறது, இன்று உலகம் பரிணாம வாதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான முடிவை பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு இரண்டு தாய்மார்கள் நினைவுக்கு வருகிறார்கள், முதல் தாய் இந்தியா. இரண்டாவது உங்களைப் போன்ற வலிமைமிக்க வீரர்களைப் பெற்றெடுத்த அந்த தைரியமான தாய்மார்கள். உங்கள் மரியாதை, உங்கள் குடும்பத்தின் மரியாதை மற்றும் அன்னையர் இந்தியாவின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு நாடு அதிக முன்னுரிமை அளிக்கிறது. படைகளுக்கு தேவையான ஆயுதம், நம் படை வீரர்கள் என அனைத்திலும் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.  இப்போது நம்நாட்டில் எல்லை உட்கட்டமைப்புகளுக்கான செலவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நாடு இன்று அனைத்து மட்டங்களிலும் தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது என பிரதமர் மோடி கூறினார். அவரது உரை சீனாவை எச்சரிக்கும் வகையிலும், அந்நாட்டுக்கு அறிவுரை கூறும் வகையிலும் அமைந்திருந்தது இந்நிலையில் பிதமர் மோடியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் 

china replay modi speech about china in lay

இந்நிலையில் பெய்ஜிங்  இந்தியாவிலுள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் மூலம் மோடியின் கருத்துக்கு விரிவான பதிலை அளித்துள்ளது, அதில் சீனாவை விரிவாக வாதியாக பார்ப்பது ஆதாரமற்றது. சீனா தனது 14 அண்டை நாடுகளில் 12 நாடுகளுடன் அமைதியான பேச்சு வார்த்தை மூலம் எல்லையை நிர்ணயித்துள்ளது. மேலும் நில  எல்லைகளை நட்பு மற்றும் ஒத்துழைப்பின் இணைப்புகளாகவே சீனா மாற்றியுள்ளது என சீன தூதரக அதிகாரி டுவிட் செய்துள்ளார். மேலும் சீனாவை விரிவாக்க வாதியாக பார்ப்பது அடிப்படையற்றது,  அண்டை நாடுகளுடனான தனது சொந்த மோதல்களையும் மிகைப்படுத்தி இந்தியா மோசடி செய்கிறது எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமரின் லடாக் பயணம் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் எல்லையில் இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க தகவல் தொடர்பு மற்றும் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தையில் இந்தியாவும் சீனாவும் ஈடுபட்டுவருகிறது, இந்நிலையில் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு தரப்பும் செயல்படக் கூடாது என அவர் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios