இந்தவகை ரத்தம் இருந்தால் கொரோனா வைரஸ் பரவாது..!! சீனா சொன்ன சுவாரஸ்ய தகவல்...!!
இதற்காக ஏ வகை இரத்தம் கொண்டவர்கள் பீதியடைய தேவையில்லை எனவும் . ஓ ரத்தம் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்களாக இருப்பதாகவும் அர்த்தமில்லை எனவும் தியான்ஜின் ஆராய்ச்சியாளர் காவ் இங்டாய் கூறியுள்ளார்
உலகையே நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் ஏ ரத்தவகை கொண்டவர்களே அதிகமாகத் தாக்குவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை . ஆகவே இந்த வைரஸ் உலக அளவில் மிக வேகமாக பரவி வருகிறது . உலக அளவில் இந்த வைரசுக்கு 7 ஆயிரத்து 987 பேர் பலியாகி உள்ளனர் . சுமார் 145 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது இந்த வைரஸ் இதுவரையிலும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது . இந்த வைரஸ் எப்படி தோன்றியது , இது எதிலிருந்து உருவானது என்ற பின்னணி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை .
இந்நிலையில் உலக சுகாதார ஆராய்ச்சி மையம் தொடங்கி உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் உலகம் முழுக்க ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 556 பேர் இந்த வைரஸ்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் சீன ஆய்வாளர்கள் வுகானில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் முக்கிய ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர் . அதாவது ரத்த வகைகளை வைத்து SARC-CoV-2 பரிசோதனையை பயன்படுத்தி 2173 நோயாளிகள் ரத்த வகைகளை வைத்து கரோனா வைரஸ் நேர்மறை ஆய்வு செய்யப்பட்டது அதில் 1778 நோயாளிகளில் 37.75% பேர் ஏ இரத்த வகைகளையும் , 9.10 சதவீதம்பேர் ஓ ரத்த வகைகளையும் கொண்டுள்ளனர். அதாவது கொரோனா வைரசால் ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பி வகை ரத்தம் கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
அந்த மருத்துவமனையில் வைரஸால் இறந்த 206 பேரில் 41. 26% பேர் ஏ இரத்தவகை கொண்டுள்ளதாகவும் , 25 சதவீதம் பேர் ஓ இரத்த வகை கொண்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது ஆனால் இதற்காக ஏ வகை இரத்தம் கொண்டவர்கள் பீதியடைய தேவையில்லை எனவும் . ஓ ரத்தம் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்களாக இருப்பதாகவும் அர்த்தமில்லை எனவும் தியான்ஜின் ஆராய்ச்சியாளர் காவ் இங்டாய் கூறியுள்ளார் அனைவரும் அரசு அதிகாரிகள் கூறும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார் . இதற்கு முன்னதாக சார்ஸ் நோய் வந்தபோது நடத்தப்பட்ட ரத்தப்பரிசோதனை ஆய்விலும் ஏ வகை ரத்தம் கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதுவும் சார்ஸ் குழுவின் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் ஆகும் என அவர் கூறியுள்ளார்.