பாகிஸ்தானுக்கு ஆதரவாக மூக்கை நுழைத்த சீனா... ஸ்பாட்டிலே மூக்கை உடைத்த இந்தியா..!

பாகிஸ்தானிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து எங்கள் நாட்டு எல்லைக்குட்பட்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.    

China raises Kashmir issue at UN India reiterates

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து பேசிய சீனாவுக்கு இந்தியா இன்று சரியான பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, ‘நெடுங்காலமாக கிடப்பில் இருக்கும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான வில்லங்கங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள விதிமுறைகளின்படி அமைதியான வகையில் தீர்க்கப்பட வேண்டும்.

China raises Kashmir issue at UN India reiterates

ஏற்கனவே அங்குள்ள நிலைமைகளை மாற்ற தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப்பட கூடாது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அண்டைநாடு என்ற வகையில் இந்த விவகாரம் சரியான முறையில் கையாளப்பட வேண்டும். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பிகிறோம்’ என்று கூறியிருந்தார்.

 China raises Kashmir issue at UN India reiterates

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் சட்டவிரோதமாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் அமைப்பது ஆகிய முயற்சிகளை தவிர்த்து, இந்தியாவின் எல்லைக்குட்பட்ட விவகாரங்கள் மற்றும் எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.China raises Kashmir issue at UN India reiterates

சமீபத்தில் காஷ்மீரில் நடந்து வரும் முன்னேற்றங்கள் முழுக்க முழுக்க எங்கள் நாட்டின் உள்விவகாரம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios