வீரியம் குறைந்ததால் வெளியே வந்த ஜி ஜின்பிங்...!! கொரோனா தோன்றிய இடத்திற்கே போய் சீன் போட்ட சீன அதிபர்..!!
வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் , வுகானில் ஆய்வு மேற்கொண்டுள்ளார் . அங்கு கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் அவர் ஆய்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது .
கொரோனா வைரஸ் தோன்றிய வுகான் நகருக்கு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் செய்துள்ளார் . வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி மறைவான இடத்தில் இருக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் முதல்முறையாக வுகானில் ஆய்வு மேற்கொண்டுள்ளார் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது . அதுமட்டுமல்லாமல் ஜப்பான் , தென் கொரியா , ஈரான் , உள்ளிட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது . சீனாவில் இதன் வீரியம் குறைந்ததாக சொல்லப்படும் நிலையில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது .
இந்த வைரஸின் ஆரம்ப புள்ளியான சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டும் கொரோனா தோன்றிய வுகான் நகரில் இன்னமும் உயிர் பலிகள் குறைந்தபாடில்லை. இது சீனாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது . இந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வைரஸ் வீரியம் குறைந்தாலும் கூடுதலாக 17 பேர் பலியானதை அடுத்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3,136 ஆக உயர்ந்துள்ளது . இதுவரை சுமார் 80 ஆயிரத்து 558 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க தெரிவித்துள்ளது . சீனாவைத் தொடர்ந்து இத்தாலி அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது . இதுதவிர ஈரான் , தென்கொரியா , அமெரிக்கா , ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் .
உலகம் முழுவதும் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4011 ஆக அதிகரித்துள்ளது . அது மட்டுமல்லாமல் , உலக அளவில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . சீனாவில் கொரோனா உருவான வுகான் நகருக்கு அந்நாட்டின அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் . வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் , வுகானில் ஆய்வு மேற்கொண்டுள்ளார் . அங்கு கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் அவர் ஆய்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது . அதேபோல் மக்களை நேரில் சந்தித்து அவர் அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . வைரஸ் தாக்கம் தொடங்கி கடந்த மூன்று மாதங்கள் ஆன நிலையில் அவர் வுகான் நகருக்கு வருவது இதுவே முதல் முறையாகும் .