நாட்டு மக்களுக்கு சீனா போட்ட கறார் உத்தரவு..!! இன்னும் கூட நிம்மதி இல்லாமல் தவிக்கும் ஜி ஜின் பிங்..!!
சீனாவின் கொரோனா வைரஸ் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் நாட்டு மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது என யாரும் அலட்சியம் காட்டக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார் .
சீனாவின் கொரோனா வைரஸ் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலைகள் நாட்டு மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது என யாரும் அலட்சியம் காட்டக்கூடாது எனவும் சீன அதிபர் ஜி ஜின் பிங் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் . சீனாவில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் அந்நாட்டை மிகக் கடுமையாக தாக்கியது, அதாவது கடந்த ஆண்டின் இறுதியிலேயே சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பரவி ஒட்டு மொத்த சீனாவையும் கபளிகரம் செய்தது , நோய்த்தொற்று அதிகமானதையடுத்து வுஹான் நகரம் ஒட்டுமொத்தமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது . அங்கு வைரஸின் தாக்கம் மிகக் கொடூரமாக இருந்ததால் பலியானோர் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது
இதனையடுத்து சீனாவின் எடுத்த அதிவேகமான நோய்த்தடுப்பு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் தொற்று பரவிய இரண்டு மாதத்திற்கு பின்னர் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது . கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வுஹான் நகரத்தில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்நகரம் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது . ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்கள் மூலம் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைரஸ் தொற்று தென்படுகிறது. இந்நிலையில் சீனாவில் இதுவரை சுமார் 82,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது , அங்கே இதுவரை 4630 மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 77 ஆயிரத்து தொள்ளாயிரத்து 93 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போதுவரை 260 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் சீனா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது இதற்கிடையில் கொரோனா தடுப்புக்கான மத்திய வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் அதிபர் ஜீ ஜின்பிங் உரையாற்றினார் அப்போது பேசிய அவர் சீனாவில் கொரோனா தாக்கம் நாம் நினைத்ததை விட வேகமாக குறைந்து வருகிறது , அதற்காக பொதுமக்கள் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் , இன்னும் கூட முழுமையாக கொரோனா ஒழிக்கப்படவில்லை இன்னும் சில பகுதிகளில் அது நிழலாடிக் கொண்டிருக்கிறது எனவே மக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் , அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் தற்போது வரை ஒரு நிச்சயமற்ற தன்மையே நீடித்து வருவதால் மக்கள் கவனமுடன் இருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார் .