Asianet News TamilAsianet News Tamil

china india: பாகிஸ்தான் தீவிரவாதிக்கு சீனா ஆதரவு: இந்தியா, அமெரிக்கா முயற்சிக்கு முட்டுக்கட்டை

பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரின் சகோதரர், அப்துல் ராப் அசாருக்கு சர்வதேச அளவில் தடை கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.

China obstruction of the blacklisting of the JeM dy chief revealed its double standards: Sources
Author
New Delhi, First Published Aug 11, 2022, 4:04 PM IST

பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரின் சகோதரர், அப்துல் ராப் அசாருக்கு சர்வதேச அளவில் தடை கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.

தீவிரவாதத்துக்கு எதிரான நாடு எனப்பேசும் சீனா, தீவிரவாதம் பற்றி இரட்டை வேடத்திலும், இரட்டை நாக்கிலும் பேசுகிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கும் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராப். அந்த தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

அதிர்ச்சி!! வெறும் 3 மாதத்தில் 10,000 ஊழியர்களை தூக்கிய அலிபாபா.. இது தான் காரணமா..?

China obstruction of the blacklisting of the JeM dy chief revealed its double standards: Sources

 கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியது, 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல், 2016ம் ஆண்டு பதான்கோட்டில் விமானப்படைத் தளம் மீது தாக்குதலில் அப்துல் ராப்புக்கு முக்கியப் பங்கு உண்டு. ஏற்கெனவே மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாத வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடு நாடாக செல்லும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே; அடுத்தது எங்கே செல்கிறார்?

இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராப்புக்கும் தடை கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இந்த முயற்சிக்கு ஆதரவாக 14 நாடுகள் முன்வந்தன. ஆனால், சீனா இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது. இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்தவிடமாமல் தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியது.

கடந்த மாதம் இதுபோன்று பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவீரவாத அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு தடை விதிக்க அமெரி்க்கா முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சியையும் சீனா தடை செய்தது.

China obstruction of the blacklisting of the JeM dy chief revealed its double standards: Sources
அப்துல் ரஹ்மான் மக்கி, தீவிரவாதத்துக்கு ஆட்களைச் சேர்த்தல், நிதி உதவி திரட்டுதல், திட்டமிடுதல், இந்தியாவைத் தாக்குதல் நடத்த திட்டமிடுதல் போன்றபல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதையடுத்து, சர்வதேச அளவில் தடை கொண்டுவர அமெரிக்க முயன்றபோது, அதற்கும் சீனா முட்டுக்கட்டை போட்டது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தடைக்குழு 1267ன் கீழ் கொண்டுவரப்பட்ட இரு திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் சீனா தடுத்தது. 

இலங்கை-யை விட்டு வெளியேற மகிந்தா ராஜபக்ச-வுக்கு தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி

China obstruction of the blacklisting of the JeM dy chief revealed its double standards: Sources

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ அப்துல் ராபுக்கு ஏற்கெனே அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் சர்வதேச அளவில் தடை கொண்டு வர தடைக்குழு முயன்றபோது, அரசியல் காரணங்களுக்காக  தடைக்குழுவின் பணிகளை செய்யவிடாமல் முடக்கப்படுவது துரதிர்ஷ்டம். தீவிரவாத்துக்கு எதிராக சீனா இரட்டை செயல்பாடுகளுடனும், இரட்டை நாக்குடனும் இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் மசூத் அசாருக்கு தடை கொண்டுவர இந்தியா பலமுறை முயன்றபோது அதற்கு சீனா தடை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அப்துல் ரஹ்மான் மக்கி, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் அரசியல் விவகாரத் தலைவர், ஜமாத் உத் தவாவிலும் உள்ளார். லஷ்கர் இ தொய்பாவின் வெளிநாட்டு விவகாரத்திலும் அப்துல் ரஹ்மான் இருந்தார். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios