சீனாவுக்கு 4000 கோடி நாமம் போட்ட இந்தியர்கள்..!! வாயிலும் வயிற்றிலும் அடித்து கதறும் ஜி ஜின் பிங்..!!
சீன தயாரிப்பு பொருட்களை இந்திய மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் இந்த ஆண்டு சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு ராக்கி விற்பனையில் சீனாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன தயாரிப்பு பொருட்களை இந்திய மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் இந்த ஆண்டு சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு ராக்கி விற்பனையில் மட்டும் சீனாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன பொருட்களை புறக்கணிப்பது இயலாத காரியம் என கூறப்பட்டு வந்த கட்டுக்கதையை இந்திய மக்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த 2 மாதத்துக்கு மேலாக இந்திய எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொலைவெறி தாக்குதலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இந்திய எல்லையில் இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இருநாடுகளும் மாறிமாறி எல்லையில் படைகளை குவித்து வந்த நிலையில், எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது. அதேவேளையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருநாடுகளும் படைகளை பின்வாங்கி உள்ளன. இதனால் எல்லை பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்து சீனாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக சீனாவின் பொருட்களை புறக்கணித்தல், மற்றும் சீன செயலிகள் புறக்கணிப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம் காட்டிவருகிறது. சீன பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற முழக்கம் நாடு முழுவதும் மக்கள் இயக்கமாகவே மாறி உள்ளது. அதேநேரத்தில் சீனப் பொருட்களை முழுவதுமாக புறக்கணிக்க முடியாது என்ற மாயத்தோற்றம் சிலரால் உருவாக்கப்பட்டது. ஆனாலும் சீன பொருட்களை புறக்கணிப்பதில் இந்தியர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில ஜூன் 10 அன்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இந்த ஆண்டு ரக்ஷா பந்தனுக்கு இந்துஸ்தானி ராக்கி என்ற முழக்கத்துடன் கொண்டாட அழைப்பு விடுத்தது. அதை வெற்றிகரமாகவும் மாறியுள்ளது. CAITயின் ஒத்துழைப்புடன் சுமார் ஒரு கோடி ராக்கிகள் இந்திய பொருட்களை பயன்படுத்தி நாடு முழுவதும் தயாரிக்கப்பட்டது. வணிக நிறுவனங்களிலும், வீடுகளிலும், அங்கன்வாடிகளிலும், மகளிர் குழுக்களாலும் ராக்கிகள் தயாரிக்கப்பட்டன.
இந்தியாவிற்கு தேவையான ராக்கிகள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதால், இந்த ஆண்டு ஒரே ஒரு ராக்கி கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சிஏஐடி யின் தேசியத்தலைவர் பி.சி பார்ட்டியா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 கோடி ராக்கிகள் 6000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ராக்கிகள் இந்தியாவில் சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போதைய இந்தியாவிலேயே ராக்கி உற்பத்தி செய்யப்பட்டிருப்பதால் சீனாவுக்கு கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் இந்த ஆண்டு ராக்கி மூலம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். சீன பொருட்களை புறக்கணிப்பதற்கான அடுத்த கட்டம் குறித்து கூறிய கண்டேல்வால் ஆகஸ்ட் 9-ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள், " சீனாவே இந்தியாவை விட்டு வெளியேறு " என்ற பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறினார். நாடு முழுவதும் சுமார் 800க்கும் மேற்பட்ட இடங்களில் கூடி சீனாவே வெளியேறு முழக்கத்தை எழுப்ப உள்ளதாக கூறினார்.