#UnmaskingChina: சீனா போர்க்குணமிக்க நாடு அல்ல..!! இந்தியாவின் காலில் நாய் குடியான சீன தூதர்..!!
சீனாவில் இருப்பது போர்க்குணமிக்க ஒரு அரசு அல்ல, சீனா அதில் உறுதியாக நிற்கும் நாடும் அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார் இந்தியா-சீனா எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை பின்வாங்கி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாவில் இருப்பது போர்க்குணமிக்க ஒரு அரசு அல்ல, சீனா அதில் உறுதியாக நிற்கும் நாடும் அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார் இந்தியா-சீனா எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை பின்வாங்கி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கல்வான் பள்ளதாக்கில் தங்களுக்கு இறையாண்மை இருப்பதாக இதுநாள்வரை சீனா கூறிவந்த நிலையில், வீடோங்கின் உரையில் அது குறித்து எந்த உரிமை கோரலும் இடம்பெறவில்லை. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக் பகுதியில் இருந்து சீனா தனது படைகளை பின்வாங்கியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பேட்ரோல் பாயிண்ட் 15-ல் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்திய-சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளும் எல்லையில் ஏராளமான படைகளை குவித்து எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வந்ந நிலையில், இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகள் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.
குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், பேட்ரோலிங் பாயிண்ட்-15 இல் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கியுள்ளன. சீனா அங்கு ஏற்கனவே உருவாக்கிய கூடாரங்கள் மற்றும் ஹெலிபேட் போன்ற கட்டமைப்புகளும் மற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. பாங்கொங் த்சோ ஏரிக்கு அருகில் உள்ள விரல் 4, ஹாட் ஸ்ப்ரிங்ஸ், கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளை திரும்ப பெற்றிருப்பதாகவும், அங்கிருந்து தனது வாகனங்கள் மற்றும் கூடாரங்கள் போன்றவற்றை முற்றிலும் அகற்றியிருப்பதாகவும் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொண்டிருப்பதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எல்லையில் நீடித்து வந்த பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது, இந்நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங், இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில் அவரது உரை அமைந்துள்ளது. அதில், சீனாவில் இருப்பது ஒரு போர்க்குணமிக்க அரசு அல்ல, அதிலேயே உறுதியாக நிற்கும் நாடும் அல்ல. இந்தியா சீனா எப்போதும் பங்காளிகளாக இருக்க வேண்டிய நாடுகள். எதிரிகளாக அல்ல என வலியுறுத்தியுள்ளார்.
இருநாடுகளும் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி, மோதல் , சந்தேகம் போன்றவற்றிக்கு மாறாக, வெற்றி. வெற்றிக்கான ஒத்துழைப்பு பேண வேண்டும் என்றார். சீன பொருட்கள் புறக்கணிப்பு, சீன நிறுவனங்களை வெளியேற்றுவது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் இந்தியாவை வளர்ப்பதற்கு பதிலாக அதை பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்திய-சீன உறவுகள் தற்போது ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்கின்றன என்பதை ஒப்புக் கொண்ட அவர், இரு நாடுகளும் பிரச்சனைகளை ஒன்றிணைந்து திறந்த மனதுடன் அணுகுவதன் மூலம், மரியாதையை செலுத்துவதன் மூலம் விரைவில் இருநாடுகளும் அதில் இருந்து மீண்டுவர முடியும் என்றார். பரஸ்பர முக்கிய நலன்களில் அக்கறை செலுத்துதல், ஒருவரின் விருப்பத்தை மற்றொருவரின் மீது திணிப்பதை தவிர்த்தல், ஒருவர் விவகாரத்தில் ஒருவர் தலையிடாத கொள்கையை பின்பற்றுவது வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்தவற்றில் சரி எது தவறு எது என்பதில் சீனா தெளிவாகி உள்ளது என்றும், தனது இறையாண்மையையும், பிராந்திய ஒருமைபாட்டையும் பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.