Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போன சீனா... கண்ணீர் விடாத குறையாக புலம்பல்..!

இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சீனாவின் 224 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலங்கிப்போய்க் கிடக்கிறது. 
 

China is devastated by India's attack ... lamenting without tears
Author
china, First Published Sep 4, 2020, 10:47 AM IST

இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சீனாவின் 224 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலங்கிப்போய்க் கிடக்கிறது. China is devastated by India's attack ... lamenting without tears

டிக்டாக், ஹெல்லோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை பப்ஜி, வீ-சாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதுவரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன. சீன தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் இந்த டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலங்கிப்போய் கிடக்கிறது. இது குறித்து சீன வர்த்தகத்துறை அதிகாரி காவ் பெங் கூறுகையில், “இந்தியா, சீன நிறுவனங்கள் மீது பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது உலக வர்த்தக கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது.China is devastated by India's attack ... lamenting without tears

இருதரப்பு ஒத்துழைப்பையும், வளர்ச்சியையும் பராமரிக்க இந்திய தரப்பு சீனாவுடன் இணைந்து செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சேவை வழங்குபவர்களுக்கு திறந்த மற்றும் நியாயமான வணிகச் சூழலை உருவாக்க முடியும். இது சீன-இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் பரஸ்பர நன்மைகளை அளிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios