#UnmaskingChina:அமெரிக்காவுக்கு நாங்கள் எப்போதும் எதிரியல்ல..!! நாய் குட்டியாக காலை நக்கும் சீனா..!!
இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நீடிக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா-அமெரிக்க உறவுகள் முன்பு இருந்த நிலைமைக்கு திரும்ப முடியாது என சிலர் கூறுகின்றனர். பழைய உறவை மீண்டும் நாம் கட்டியெழுப்ப முடியும்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று, ஹாங்காங்கில் சீன ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில் இரு நாடுகளும் கடுமையான சவாலை எதிர்கொள்கின்றன எனவும், ஒருபோதும் அமெரிக்காவை சீனா எதிரியாக பார்க்கவில்லை எனவும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யி தெரிவித்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே ஆரம்பகாலம் தொட்டே பனிப்போர் நீடித்துவரும் நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான வார்த்தைப்போர் மோதலாக வெடித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு தென்சீனக் கடல் பகுதி உள்ளிட்ட இடங்களில் அது போர்பதற்றமாகவும் உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ, சீனா மீது இந்தியா எடுத்த நடவடிக்கையை போல அமெரிக்காவும் டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக ஊடக பயன்பாடுகளை தடைசெய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார். டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு தகவல்கள் கடத்தப்படுகிறது என்பதால் அவற்றை தடை செய்வதில் ட்ரம்ப் தீவிரமாக உள்ளார் எனவும் பாம்பியோ கூறியுள்ளார். இதனால் இரு நாட்டுக்கும் இடையேயான மொதல் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யி சமீபகாலமாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான புரிதலில் தடை இருந்து வருகிறது. விரைவில் சீனாவை அமெரிக்கா புரிந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். கருத்தியல் சார்பு காரணமாக சில அமெரிக்கர்கள் சீனாவை ஒரு எதிரியாகவே பார்க்கின்றனர், சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் சீன அமெரிக்க உறவுகளை தடுக்கவும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கின்றனர்.
ஒருபோதும் அமெரிக்காவை சவால் செய்யவோ, அதை எதிர்க்கவோ சீனாவுக்கு எந்த நோக்கமும் இல்லை. அமெரிக்காவுடனான தனது கொள்கையில் சீனா அதிக அளவு ஸ்திரத்தன்மையையும், உறவையும் பராமரித்து வருகிறது. சீனா அமெரிக்காவுடன் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நீடிக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா-அமெரிக்க உறவுகள் முன்பு இருந்த நிலைமைக்கு திரும்ப முடியாது என சிலர் கூறுகின்றனர். பழைய உறவை மீண்டும் நாம் கட்டியெழுப்ப முடியும். சீனாவின் வெற்றி மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் என்ற கூற்றில் கொஞ்சமும் உண்மை இல்லை, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சீனா எப்போதும் சீனாவாகவே இருக்கும் அது ஒருபோதும் அமெரிக்காவாக மாற முடியாது என வாங்-யி தெரிவித்துள்ளார்.