Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina:எல்லையில் கூடாரம் போட்டு அமர்ந்த பிணந்தின்னிக் கழுகு சீனா.. நிலைமையை மிட்டெடுக்க இந்தியா கெடு

அதை உறுதி செய்யும் வகையில் இருதரப்பினரும் கல்வான் மற்றும் கோக்ராவில், 14, 15 மற்றும் 17 பெட்ரோல் புள்ளிகளில் துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

China eagle tied to the border in gal-wan river area
Author
Delhi, First Published Jun 25, 2020, 6:51 PM IST

சீனாவுடனான சுமார் 3488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தனது ராணுவ வலிமையை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு  கோட்டின் மறுபுறத்தில் சீனா தனது ராணுவத் துருப்புகளை அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவும் படைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.  இந்திய ராணுவம் மட்டுமல்லாது இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை வீரர்களையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இராணுவத்திற்கு உதவ கூடுதல் (ஐடிபிபி) இந்தோ- திபெத்திய எல்லைக் காவல்படை தலைவர் தோஸ்வால் லேவுக்கு சென்று பார்வையிட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா- சீனா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.  எல்லையில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு, அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு, போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா மீது ஆற்றாமையில் இருந்து வந்த சீனா, கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீன எல்லைக்குள் அத்துமீறியதாக கூறி  எல்லையில் தன் ராணுவத்தை குவித்தது. 

China eagle tied to the border in gal-wan river area

அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கடந்த ஜூன்-15 ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம்  தெரிவித்தது. உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் எல்லையில் கூடதலாக படைகளை குவித்து வருவதால், இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சுழல் இருந்து வருகிறது, இந்நிலையில் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.  இராணுவத்திற்கு உதவ கூடுதல் (ஐடிபிபி) இந்தோ- திபெத்திய எல்லைக் காவல்படை தலைவர் தோஸ்வால் லேவுக்கு சென்று பார்வையிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

China eagle tied to the border in gal-wan river area

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மூத்த அதிகாரி ஒருவர் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்படுவதற்கு முன்னர் நாங்கள் சில வீரர்களை லடாக்கிற்கு அனுப்பி இருந்தோம், இப்போது இந்த பகுதியில் நாங்கள் எங்கள் வீரர்களை அதிகரித்து வருகிறோம், ஏனெனில் எல்லையில் இனி ரோந்துபணிகளை அதிகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 30 பேர் கொண்ட படைப்பிரிவுகளில் தற்போது 100 ஜவான்கள் இடம் பெற்றுள்ளனர். தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு வந்த அறிக்கையின்படி திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங் மற்றும் பாங்கொங் த்சோ ஏரியில் நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது. ஏப்ரல்-30ஆம் தேதிக்குள் நிலைமை மீட்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. மால்டோவாவில் நடைபெற்ற உரையாடலின் படி இரு தரப்பினரும் படைகளை பின்வாங்க வேண்டும் என தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர். 

 China eagle tied to the border in gal-wan river area

அதை உறுதி செய்யும் வகையில் இருதரப்பினரும் கல்வான் மற்றும் கோக்ராவில், 14, 15 மற்றும் 17 பெட்ரோல் புள்ளிகளில் துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து புள்ளி 15க்கு அருகில் சீனாவும் பெரிய கூடாரங்களை அமைத்து ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு தங்கியுள்ளது. செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் அதை காட்டியுள்ளன. 17வது புள்ளியிலும் இருதரப்பில் இருந்தும் ஏராளமான வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சீன வீரர்கள் பாங்கொங் ஏரி அருகே ஃபிங்கர் 4 ஐ அடைந்துள்ளனர். 120 வாகனங்கள் மற்றும் டசன் கணக்கான படகுகளும் உள்ளன, அதே நேரத்தில் சீனா ஒருதலைப்பட்சமாக உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் நிலைமையை கேள்விக்குறியாக்குகிறது என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மூத்த அதிகாரி ஒருவர் சீன ராணுவம் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஒரு பெரிய அளவிலான முகாமை அமைத்துள்ளது, எனவே இப்போது நாங்கள் எங்கள் பலத்தை அதிகரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.  இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, ஆனாலும் அதில் முழுமையான உடன்பாடு எட்டுவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் எல்லையில் இந்தியா கூடுதல் படைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios