Asianet News TamilAsianet News Tamil

அடேய் சீனாக்காரா.. எதிலும் உண்மையா இருக்க மாட்டியாடா.?? உலக வங்கி அறிக்கையிலயே கை வச்சுட்டியே இது நியாமா.?

அதாவது தொழில் செய்ய உகந்த நாடுகள் "ஈசி ஆப் டூயிங் பிசினஸ் "  அறிக்கையில் சீனாவுக்கு ஆதரவாக கிறிஸ்டியானோ செயல்பட்டது தெரியவந்துள்ளது. சீனா தொழில் செய்வதற்கு ஏதுவான சுற்றுச்சூழல் கொண்ட நாடு என்றும், சீனாவின் தொழில் வளர்ச்சி அபரிமிதமானது என்றும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை தயாரிக்க கிறிஸ்டியானா சீனாவுக்கு உதவியது தெரியவந்துள்ளது

.

China.. Don t you know how to be honest .?  you cheat on everything.? is it fair to cheat on the World Bank report
Author
Chennai, First Published Sep 18, 2021, 9:54 AM IST

உலக அளவில் தொழில் செய்ய உகந்த நாடு என்ற அறிக்கையில் முதலிடத்தைப் பிடிக்க உலக வங்கி அதிகாரிகளை தனக்கு சாதகமாகப் சீனா பயன்படுத்திய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்மர்  ஹோல் என்கிற தனியார் சட்ட அமைப்பு நடத்திய விசாரணையில் சீனாவின் அயோக்கியத்தனம் அம்பலமாகியுள்ளது. எனவே இதன் எதிரோலியாக " ஈசி ஆப் டூயிங் பிசினஸ்" என்ற ஆண்டு அறிக்கையை இனி வெளியிடப் போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியே அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது, எனவே அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா, சீனா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் அதற்கான பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு நாட்டில் தொழில் செய்யும் சூழல் நன்றாக உள்ளதா கடந்த ஆண்டை விட தொழில் செய்வதற்கான சூழலில் முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, உலக வங்கி ஆண்டுதோறும் "ஈசி ஆப் டூயிங் பிசினஸ் "என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.  இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்தே பல முன்னணி நிறுவனங்கள் குறிப்பிட்ட நாடுகளில் தொழில் தொடங்குவதை முடிவு செய்கின்றன. அந்த அளவிற்கு நம்பகத்தன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையாக "ஈசி ஆப் டூயிங் பிசினஸ் "அறிக்கை இருந்து வருகிறது. 

China.. Don t you know how to be honest .?  you cheat on everything.? is it fair to cheat on the World Bank report

அதாவது உலக அளவில் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் முதலீடு செய்யலாமா அல்லது கூடாதா என்பதை முடிவு செய்வதற்கு இந்த அறிக்கையை உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உள்வாங்கிக் கொண்ட பல நாடுகள் எப்படியேனும் "ஈசி ஆப் டூயிங் பிசினஸ் " அறிக்கையில் முன்னணி இடத்தை பெறவேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதற்காக தங்களது நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது, உட் கட்டமைப்புகளை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த அறிக்கையில் முன்னணி இடத்தை வகிக்க வேண்டும் என்பதற்காக சீனா சில குறுக்கு வழிகளை கையாண்டு உள்ளது தற்போது அம்பலமாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டில்  உலக வங்கி அறிக்கையின்படி தொழில் செய்ய உகந்த நாடு என்ற பட்டியலில் 78வது  இடத்தில் இருந்த சீனா திடீரென 7 இடங்களுக்கு முன்னேற்றம் கண்டு 71வது இடத்தை அடைந்தது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்ய தொடங்கின. 

China.. Don t you know how to be honest .?  you cheat on everything.? is it fair to cheat on the World Bank report

ஆனால் சீனாவின் இந்த திடீர் முன்னேற்றம் பல நாடுகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது, இதனால் உலக வங்கியின் "ஈசி ஆப் டூயிங் பிசினஸ் " அறிக்கை குறித்து பல்வேறு நாடுகள் புகார் எழுப்பின. இந்நிலையில் அந்த புகாரில் உண்மைத்தன்மை குறித்து 'வில்மர் ஹோல்'  என்ற தனியார் சட்ட அமைப்பு விசாரணை நடத்தியது.  அதற்காக பல்வேறு ஆவணங்களை திரட்டி ஆய்வு செய்ததுடன், அதுதொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி அதை வீடியோவாகவும் ஒளிப்பதிவு செய்தது. அந்த விசாரணையின் முடிவில் 2017 ஆம் ஆண்டு உலக வங்கியின் தலைமை அதிகாரியாக இருந்த ' கிறிஸ்டியானோ ஜார்ஜியோவா' உள்ளிட்ட அவரது சக ஊழியர்கள் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. அதாவது தொழில் செய்ய உகந்த நாடுகள் "ஈசி ஆப் டூயிங் பிசினஸ் "  அறிக்கையில் சீனாவுக்கு ஆதரவாக கிறிஸ்டியானோ செயல்பட்டது தெரியவந்துள்ளது. சீனா தொழில் செய்வதற்கு ஏதுவான சுற்றுச்சூழல் கொண்ட நாடு என்றும், சீனாவின் தொழில் வளர்ச்சி அபரிமிதமானது என்றும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை தயாரிக்க கிறிஸ்டியானா சீனாவுக்கு உதவியது தெரியவந்துள்ளது. 

China.. Don t you know how to be honest .?  you cheat on everything.? is it fair to cheat on the World Bank report

தற்போது சீனாவின் இந்த தில்லாலங்கடி வேலை அம்பலமாக்கி இருப்பதைடுத்து உலக வங்கி தனது ஆண்டறிக்கையான "ஈசி ஆப் டூயிங் பிசினஸ் " அறிக்கையை நிறுத்துவதாகவும் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு உதவிய கிறிஸ்டியானோ ஜார்ஜியா தற்போது சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார், ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விளக்கத்தை உலக வங்கி தலைவரிடம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது தங்களின் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், அதிக வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கவும்  சீனா உலக வங்கியையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருப்பது பல நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

China.. Don t you know how to be honest .?  you cheat on everything.? is it fair to cheat on the World Bank report

பல்வேறு நாடுகள் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு உதவியாக இருந்து வந்தார் "ஈஸி ஆர் டூயிங் பிசினஸ்" அறிக்கை முற்றிலும் நிறுத்தப்படுவதற்க்கு சீனா இப்போது காரணமாக மாறியுள்ளது. உலக வங்கியின் இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகளுக்கு சீனாவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி பதவியேற்ற உடன் "ஈஸி ஆப் டூயிங் பிசினஸ்" அறிக்கையில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது அதன் அடிப்படையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கடந்த 2020இல் 190 நாடுகள் உள்ள பட்டியலில் 142 வது இடத்திலிருந்து இந்தியா 29 இடங்கள் முன்னேறி 63வது  இடத்தை அடைந்தது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios