இந்திய எல்லையில் சீனா படைகளை குவிக்கவில்லை..!! சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நக்கல் பேச்சு..!!

இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார். மேலும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளை சீன ராணுவத்தினர், மதித்து நடந்து வருகின்றனர்.
 

China does not concentrate on Indian border, Chinese Foreign Ministry spokesman copy speech

இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வரும் நிலையில், இந்தியப்படைகள் கைப்பற்றியுள்ள காலா டாப் பகுதிக்கு மிக அருகிலேயே சீனா போர் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை நிறுத்தி  வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்திய எல்லையில் அதுபோன்று எந்த படை குவிப்பும் செய்யப்படவில்லை என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். குறிப்பாக பாங்கொங் த்சோ ஏரியை குறிவைத்த சீனா எல்லையில் மீண்டும் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. 

China does not concentrate on Indian border, Chinese Foreign Ministry spokesman copy speech

மாரி மாரி சுட்டுக்கொள்ள கூடிய தொலைவுக்கு மிக அருகிலேயே இரு நாட்டு ராணுவங்களும் உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முப்படைகளின் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங். மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீனாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார். மேலும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளை சீன ராணுவத்தினர், மதித்து நடந்து வருகின்றனர். 

China does not concentrate on Indian border, Chinese Foreign Ministry spokesman copy speech

70 ஆண்டுகளில் பிற நாட்டின்  ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க சீனா முயன்றதோ, போரை தூண்டும் மோதல்களில் ஈடுபட்டதோ இல்லை. எல்லை தாண்டியதும் இல்லை. சில நேரங்களில் தகவல் தொடர்பில் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இரு தரப்பும் அமைதியையும், நல்லுறவையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பேச்சுவார்த்தைகளின் மூலம் எல்லைகளில் அமைதியை பாதுகாக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரு நாட்டு மக்களும் உண்மைகளை உணர்ந்து, அமைதியாக வாழவே விரும்புகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios