கோரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீன-ரஷ்ய எல்லையை மூடப்படும்  என ரஷ்ய பிரதமர் மிஹைல்  மிஷூஸ்தின் அறிவித்துள்ளார் சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கோரோனா வைரஸ் மிகக் கொடிய நோயாக மாறி  சீனாவை கதிகலங்க வைத்துள்ளது.   இதுவரையில் சுமார் 170 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  சீன எல்லையை கடந்த கோரோனா  வைரஸ் அமெரிக்கா,  ஆஸ்திரேலியா , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது .  சார்ஸ் வைரஸ் போன்று உலகம் முழுவதும் இது பரவுவதால் உலகநாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் . 

இந்நோய் மிகவேகமாக உலக அளவில் பரவுவதால் சீனாவுடனான போக்குவரத்தை முற்றிலுமாக உலக நாடுகள்  துண்டிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில் சீனாவின் முக்கிய நாடுகளுக்கு விமான பயணிகள் போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன .  இந்த வைரஸின் அறிகுறி சாதாரண காய்ச்சல் போல இருக்கும் என்பதால் 14 நாள் வரை தனிமைப்படுத்தி பரிசோதித்த பின்னரே அது உறுதி செய்யப்படுகிறது . அதேபோல் சிலருக்கு தீவிரமாக சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாமல் போகிறது .  இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வைரஸ் தாக்கிய அடுத்த பத்து தினங்களில்  உயிரிழப்புகள் நிகழ்கிறது . 

இந்நிலையில் சீனாவில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் வேகவேகமாக வெளியேறிவருகின்றன .  இந்நிலையில் சீனாவில் இருந்து வருபவர்களால் வைரஸ் பரவுவதால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளன . இந்த வைரஸ் பாதிப்பினால் சீன ரஷ்ய எல்லை மூடப்படும் என ரஷ்ய பிரதமர் மிஹைல்  மிஷூஸ்தின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .  இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நாட்டின் தூர கிழக்கு எல்லை மூடப்படும்  என்றும் ,  சீன நாட்டினருக்கு மின்னணு விசா வழங்குவதையும் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.  ரஷ்யாவுக்கு சுற்றுலா வந்த சீனப் பயணிகளை  தடுத்து நிறுத்தி அவர்களை பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.