தன்னால் உருவான வைரசை தானே அழிக்க முடிவு..!! கொரோனா மருந்து ஆராய்ச்சியில் சீனா வெற்றி...!!
அவர்களை 28 நாட்கள் கண்காணித்ததில் அவர்கள் உடலில் எந்தவித தீவிரமான மாற்றங்களும் தென்படவில்லை , அதாவது தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக் கொண்டுள்ளதே இதன் பொருளாகும் .
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளதாக சீனாவின் கேன்சினோ பயோ லாஜிக்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கொரோன வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தியதில் அது பாதுகாப்பாகவும் , பயனுள்ளதாகவும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் சுமார் 150 க்கும் அதிகமான நாடுகளில் கடுமையான தாக்கதை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் இதுவரை 55 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் , வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில் , அதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை, ஒரு பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.
30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை நடத்தியதாகவும், அது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் சீனா அறிவித்துள்ளது . இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி இதழான தி லான்செட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது . அதில் கூறப்பட்டுள்ளதாவது :- கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட சோதனையில் சீனா வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஆய்வுக்காக மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை தகுதியான 195 பேரை தேர்வு செய்து அதில் 108 பேருக்கு மருந்து செலுத்தப்பட்டது , அதில் 51% ஆண்கள் 49% பெண்கள் எனவும் சராசரி வயது 36 எனவும் அவர்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு அளவுகளில் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களை 28 நாட்கள் கண்காணித்ததில் அவர்கள் உடலில் எந்தவித தீவிரமான மாற்றங்கள் தென்படவில்லை , அதாவது தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக் கொண்டுள்ளதே இதன் பொருளாகும் .
ஆனால் மருந்து செலுத்தப்பட்டவர்கள் லேசான சோர்வு மற்றும் தலைவலி , மூட்டுவலி போன்ற பக்க விளைவுகளால் அவதிப்பட்டனர், இந்த தடுப்பூசியால் நன்மைகளும், தீமைகளும் உள்ளன . ஆனாலும் இது வெற்றிகரமான தடுப்புசியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இது சார்ஸ் வைரஸுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது , இந்த தடுப்பு மருந்துக்கு Ad5-ncov எனப் பெயரிடப்பட்டுள்ளது . முதற்கட்ட சோதனையில் கிடைத்துள்ள வெற்றி அடுத்தக்கட்ட சோதனைக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது . தாங்கள் கண்டறிந்த முடிவுகள் ஒரு முக்கியமான மைல்கல் , இந்த தடுப்பூசி 14 நாட்களில் வைரஸ் சார்ந்த ஆன்டிபாடிகள் மற்றும் டி செல்களை உடலில் உருவாக்குவதாக பீஜிங் இன்ஸ்டியூட் ஆப் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் பேராசிரியர் வீ சென் தெரிவித்துள்ளார்.