மரண போராட்டத்திலும் நாட்டின் மாண்பை காத்த சீனா...!! வெளிநாட்டினரை பத்திரமாக வெளியேற்றுவதே எங்கள் கடமை என உருக்கம்...!!
உகான் மற்றும் ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் அனைத்து நாட்டு மக்களின் உயிரையும் நலத்தையும் பாதுகாப்பதற்கு சீன முக்கியத்துவம் அளிக்கிறது .
கொரோனா வைரஸ் சீனாவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க சீனாவில் இருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு சீனா உதயதயாராக உள்ளது என இந்நாடு அறிவித்துள்ளது. ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கடந்த மாத இறுதியில் கண்டறியப்பட்டன வைரஸ் வேகமாக சீனா முழுவதும் பரவி அந்நாட்டை மரணபீதியில் ஆழ்த்தியுள்ளது . எப்போதும் இல்லாத அளவுக்கு கொடிய வைரஸ் பிடியில் சீனா சிக்கி தவித்து வருகிறது . இந்த வைரஸ் காய்ச்சலுக்கு ஆளானவர்கள் மரணத்தை தழுவும் சோகம் நிகழ்ந்து வருகிறது . இந்நிலையில் இந்த காய்ச்சலுக்காக 232 பேர் பலியாகியுள்ளனர் . இதில் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 125 பேர் மடிந்துள்ளனர். மொத்தம் 7 ஆயிரத்து 700 பேர் இந்த கொடிய வைரஸ் பிடியில் சிக்கியுள்ளனர் .
சுமார் 1, 731 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது . இந்த வைரஸ் விரைவில் உச்சக்கட்டத்தை எட்டும் எனவும் பலி எண்ணிக்கை அதனால் அதிகரிக்கும் எனவும் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது , இது குறித்து தெரிவித்துள்ள இக்குழுவின் தலைவர் ஜோன் நான் ஷாங் , இந்த வைரஸை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் , அது எப்போது உச்சக்கட்டத்தை எட்டும் என கணிக்க முடியாது , ஆனால் இன்னும் 10 நாட்களில் இதன் தாக்கும் வீரியமடைந்து உச்சக்கட்டத்தை எட்டும் . தடுப்பூசி இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை ஆகும் , அதற்குள் மிக வேகமாக இந்நோய் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் , கனடா , மலேசியா , அமெரிக்கா , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தலைகாட்ட தொடங்கியுள்ளது .
இந்நிலையில் தங்கள் நாட்டு மக்களை சீனாவில் இருந்து மீட்க அந்தந்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன . இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், உகான் மற்றும் ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் அனைத்து நாட்டு மக்களின் உயிரையும் நலத்தையும் பாதுகாப்பதற்கு சீன முக்கியத்துவம் அளிக்கிறது . தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற அனுமதிக்குமாறு எந்த நாடும் கேட்டுக்கொண்டால் சர்வதேச நடைமுறையின்படி அதற்கான உதவிகளைச் செய்து அளிக்கும், இந்நிலையில் சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது சீனாவிலும் உலக அளவிலும் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதே தங்களின் உச்சபட்ச நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் கூறியுள்ளார் .