முதன் முதலில் கொரோனாவை கண்டறிந்து எச்சரித்த மருத்துவர் லி ...!! மனம் வருந்தி மன்னிப்பு கேட்டது சீனா..!!

இந்நிலையில் சீனாவில் இதனுடைய தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் உயிரிழந்த மருத்துவர் லி, யிடம்  தற்போது சீனா மன்னிப்பு  கேட்டுள்ளது .  இது குறித்து வூக்கன்  போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 

china asked forgive with  doctor lee ,  who find out corona virus in begin stage in china

கொரோனாவை  முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரித்த  மருத்துவர் லீ யிடம்  சீனா  தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளது .  அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு இருந்தால் இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டோம் என சீனா மன வருத்தம் தெரிவித்துள்ளது .  சீனாவின் வூக்கன் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது .  மத்திய வூக்கன் நகரின் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் லி ,  கடந்த டிசம்பர் மாதம் 30ஆம்  தேதி மருத்துவமனைக்கு வந்த  நோயாளியை பரிசோதித்தார்  அவர், அந்த நபருக்கு  சார்ஸ் வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்தார்.  இதுகுறித்து சக மருத்துவர்களையும் எச்சரித்துள்ளார் . 

china asked forgive with  doctor lee ,  who find out corona virus in begin stage in china

அத்துடன் மருத்துவர்களை முகக் கவசம் அணியும்படி வலியுறுத்தியுள்ளார்.  ஆனால் அப்போது யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை .  அதேநேரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் மருத்துவரை சந்தித்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இப்படி பொய்  தகவல்களையும் பரப்ப மாட்டேன் எனக் கூறும்படி அவரிடமிருந்து  எழுத்துப்பூர்வமான கடிதத்தைப் பெற்று சென்றனர் .  ஆனாலும் லி அதை  சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார் . பின்னர் கொரோனா  சீனாவில்  வேகமாக  பரவுவது கண்டறியப்பட்டது .  இந்த வைரஸ்  மிக வேகமாக பரவி மருத்துவர்  லியையும்  தாக்கியது ,  அதில் பாதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் .  தற்போது இது சீனா முழுவதும் பரவி பெரும் மனித உயிரிழப்பு ஏற்படுத்தியதுடன் .  உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

china asked forgive with  doctor lee ,  who find out corona virus in begin stage in china

 சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் .  இந்நிலையில் சீனாவில் இதனுடைய தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் உயிரிழந்த மருத்துவர் லி, யிடம்  தற்போது சீனா மன்னிப்பு  கேட்டுள்ளது .  இது குறித்து வூக்கன் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  மருத்துவர் லீ  வென்லியாங்  எங்களுக்கு கொரோனா  குறித்து முதலில் சொன்னார் .ஆனால் அவர் பேச்சை நாங்கள் மதிக்கவில்லை ,  மறாக அவர் மீது  வழக்குப்பதிவு செய்தோம்,  நாங்கள் செய்தது  மிகப்பெரிய தவறு .   இதை எங்களால் மறக்க முடியாது .  அவர் சொன்னபோதே  நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும் .  அப்படி செய்திருந்தால் வைரஸ் பரவலை தடுத்திருக்க முடியும் .   இவ்வளவு பேர் பலியாகி இருக்கமாட்டார்கள் .  மக்களுக்காக  உயிரிழந்த லீ வென்லியாங்கிடமும் அவரது குடும்பத்தினரிடமும்  பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம் .  லி மீதான வழக்கை வாபஸ் செய்கிறோம் என தெரிவித்துள்ளது .

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios