#UnmaskingChina:வெறி அடங்காத சீன ராணுவம் மலைஉச்சியில் போர்ப்பயிற்சி..!! இந்தியாவை மிரட்டிப்பார்க்க முயற்சி..!!
டைப் -15 இலகுரக டாங்கிகள், எச் ஜே-10 எதிர்ப்பு டாங்கிகள், ஏவுகணைகள் போன்றவை அதில் இடம்பெற்றிருந்தன. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆயுதப்படைகளின் தரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பல்வேறு அதிநவீன கருவிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு அருகே இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் சீனா இன்று திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் பெரிய அளவிலான ராணுவ பயிற்சியை நடத்தியது, அதில் முக்கிய போர் விமானங்களும், டேங்கர்களும், ஏராளமான படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். இது முற்றிலும் ஒரு போருக்கு தயாராவதற்கான அறிகுறி என்றும், இந்தியாவை அச்சுறுத்தும் முயற்சி என்றும் கூறப்படுகிறது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மெத்த இந்தியாவும் சீனாவுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்மென கொந்தளித்து வருகிறது, இந்நிலையில் இன்று திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் பெரிய அளவிலான ராணுவ பயிற்சியில் அது ஈடுபட்டுள்ளது, அதில் முக்கிய போர் விமானங்களும், டேங்கர்களும், ஏராளமான படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், அதற்கான புகைப்படங்களையும் சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது, திபெத்தில் மிகப் பெரிய போர் பயிற்சியில் சீனா ஈடுபட்டதுடன், சீன டாங்கிகள் குண்டுகளை வீசி இலக்குகளை தாக்கி அழித்தன, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தனது ராணுவ பயிற்சிகளின் மூலம் தனது டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் வீரர்கள் உயரமான மற்றும் தாழ்வான மலைப்பகுதிகளில் போராடத் தயாரா என்பதை அது பரிசோதித்துப் பார்த்துள்ளது. இந்த ராணுவ பயிற்சிக்காக சீனா முழுவதிலுமிருந்து ஆயுதங்களும், வீரர்களும், டாங்கிகளும் கவச வாகனங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அதில் பல புதிய ஆயுதங்களும் இடம்பெற்றிருந்தன.
டைப் -15 இலகுரக டாங்கிகள் எச் ஜே-10 எதிர்ப்பு டாங்கிகள், ஏவுகணைகள் போன்றவை அதில் இடம்பெற்றிருந்தன. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆயுதப்படைகளின் தரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பல்வேறு அதிநவீன கருவிகள் இதில் இடம்பெற்றுள்ளன. கிங் காங்காய்- திபெத் பீடபூமியில் தீயணைப்பு பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அங்கு 4700 மீட்டர் உயரம் கொண்ட மலை முகடுகளில் பொருத்தப்பட்டிருந்த இலக்குகள், டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி அழிக்கப்பட்டன. இதில் பல ராக்கெட் லாஞ்சர்கள், ஹோவிட்சர்கள் மற்றும் விமான எதிர்ப்பு தளவாடங்களும் பயன்படுத்தப்பட்டது, முன்னதாக பி.எல்.ஏவின் விமானப்படை இரவில் அதே பகுதியில் ராணுவ பயிற்சியும் வான்வெளி தாக்குதலுக்கான முழு ஒத்திகையும் நடத்தியது, அதில் அதிக உயரமுள்ள டாங்கிகள் இரவு நேர பாராசூட் உள்ளிட்ட பரிமாணங்களில் தீவிர பயிற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டது. கடந்த 3 மாத காலமாகவே சீனா பல்வேறு பகுதிகளில் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.