#UnmaskingChina: இந்திய ராணுவ வீரர்களை சிறைபிடித்து சீனராணுவம் அட்டூழியம்..?? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு..!!
வீரர்கள் திங்கட்கிழமை சிறை பிடிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் 10 வீரர்களும் வியாழக்கிழமை தாமதமாக விடுவிக்கப்பட்டதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் மற்றும் பிற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு லடாக் பகுதிகள் இந்திய சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது, இந்நிலையில் இந்திய சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் மூலம் நம் வீரர்களை சீனா விடுவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்கியதால் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் இழந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் நமது ராணுவ வீர்கள் நள்ளிரவில் எல்லையில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருடன் அமைத்தி பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும் அப்போது முன்கூட்டியே தாக்க தயாரிப்புடன் இருந்த சீனர்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் நம் வீரர்கள் பதில் தாக்குதல் நடந்தி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிப்படைய வைத்துள்ளது.
அதுமட்டுமின்றி எல்லையில் நடந்த மோதலின் போது பல ராணுவ வீரர்கள் மாயமானதாகவும், அவர்களில் பலரை சீன ராணுவம் சிறை பிடித்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியானது, இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்ததுடன் நமது வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் சீன ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய வீரர்கள் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் விடுவிக்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய இராணுவத்திற்கும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையிலான பொது மட்ட பேச்சுவார்த்தைகளில் விடுதலை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், வீரர்கள் திங்கட்கிழமை சிறை பிடிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் 10 வீரர்களும் வியாழக்கிழமை தாமதமாக விடுவிக்கப்பட்டதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் மற்றும் பிற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.