Asianet News TamilAsianet News Tamil

256 வயது வரை வாழ்ந்த சீன மனிதர்!

china aged-man
Author
First Published Dec 7, 2016, 12:56 PM IST


லி சிங்-யோன், சீனாவைச் சேர்ந்த இவர் உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் ஓர் மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறப்பை பற்றி இன்று வரையும் சரியான தகவல்கள் கிடைக்கப்படவில்லை.

சிலர் இவர் 1736ம் ஆண்டு பிறந்தார் எனவும், சிலர் வரலாற்றுக் கூற்றுப்படி பார்க்கையில் இவர் 1677ம் ஆண்டே பிறந்திருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். எப்படி வைத்துப் பார்த்தாலும் இவரது வயது 197 அல்லது 256ஆக இருக்க வேண்டும்.

இரண்டில் எது இவரது வயதாக இருந்தாலும், இவர் தான் அதிக வயது வாழ்ந்த நபராகக் கருதப்படுவார். இவர் இறக்கும் முன், இவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததற்கான இரகசியத்தையும் கூறிச் சென்றுள்ளார்.

பத்து வயதில் மூலிகையாளராக தன் துறையை தேர்ந்தெடுத்து பயணத்தை துவங்கிய லி சிங்-யோன். நாற்பது வருடங்கள் கோஜி பெர்ரீஸ், லிங்க்சி, காட்டு கின்செங், ஹி ஷுவு, கோட்டு கோலா, மற்றும் ரைஸ் வைன் போன்ற மூலிகை உணவுகளை உண்டு வந்துள்ளார். இதையே இவர் நூறு வயது வரை கடைப்பிடித்து வந்தார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், 1749ம் ஆண்டு இவரது 71வது வயதில் இவர் சீன இராணுவத்தில் தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் நபராகச் சேர்ந்துள்ளார். இவர் 23முறை திருமணங்கள் செய்திருந்தார். இவருக்கு 200 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் தான் உலகின் வயதான நபர் இல்லை என்றும், ஒருமுறை லீ ஏறத்தாழ 500 வருடங்கள் வாழ்ந்த நபரைச் சந்தித்ததாக கூறியிருக்கிறார் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

அந்த நபர் தான் இவருக்கு கிகோங் என்னும் விஷேசமான தற்காப்பு பயிற்சியையும் மற்றும் சிறப்பு மூலிகை உணவு பழக்கத்தையும் கற்பித்தார் எனவும், அதன் மூலமாகத் தான் இவர் அசாதாரண நீண்ட ஆயுள் வாழ முடிந்தது எனவும் கூறப்படுகிறது.

லீ இறக்கும் முன்னர் அவரது நீண்ட ஆயுளின் ரகசியத்தைப் பற்றி கேட்டபோது, ஆமை போல அமர வேண்டும், புறா போல நடக்க வேண்டும், நாய் போல உறங்க வேண்டும், இதயத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சீன அரசின் வரலாற்றுக் கோப்புகளில், லீயின் 150வது (1827) மற்றும் 200வது (1877) பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த குறிப்புகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது. இதைச் சீனாவின் உள்ள பிரபல செங்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வூ என்பவர் உறுதி செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios