காதலுக்கு வயது ஒரு தடையில்லை...65 வயது மூதாட்டியை மணந்த 27 வயது இளைஞர்
காதலுக்கு வயது ஒரு தடையில்லை இதுவே ஒரு உதாரணமாகும். சண்டிகரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த 65 வயது மூதாட்டியை மணந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சண்டிகரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த 65 வயது மூதாட்டியை காதலித்துதிருமணம் செய்துகொண்டார். முதுகலை பட்டத்தை முடித்த பிரவீன் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எபுனேர் என்ற 65 வயது மூதாட்டியை சமூக வலை தளம் வாயிலாக, காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சண்டிகர் வந்த கரென் லிலியனை பிரவீன் திருமணம் செய்தார். அடுத்த மாதம் இருவரும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.