Asianet News TamilAsianet News Tamil

அப்போ அதெல்லாம் உண்மையா? 3 விரல்கள் கொண்ட ஏலியன்ஸ்? - காட்சிக்கு வைக்கப்பட்ட 1000ம் ஆண்டு பழமையான சடலங்கள்!

கடந்த செவ்வாயன்று மெக்சிகோ சிட்டியில், அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வேற்றுகிரகவாசிகள் போன்ற உருவம் கொண்ட இரண்டு சடலங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆன்லைனில் இந்த நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் சிறிய "மனிதர் அல்லாத" உடல்கள் பெட்டிகளில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

centuries old two alien like corpses found peru exhibited in mexico video went viral in internet ans
Author
First Published Sep 14, 2023, 6:04 PM IST

ஏலியன்கள் என்பது பல நூற்றாண்டுகளாக ஒரு மர்மமான விஷயமாகவே இருந்து வருகின்றது, பலநூறு வருடங்களாக இது குறித்த ஆராச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் வருகின்றது என்று தான் கூறவேண்டும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள் ஏரியா 51 என்ற இடத்தை அமைத்து, அதில் ரகசியமாக ஏலியன்கள் குறித்து ஆராச்சி செய்வதாகவும், அந்த இடங்களுக்கு ஏலியன்கள் வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மெக்ஸிகோ நகரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு "மனிதன் அல்லாத உடல்கள்" காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக சிரிய அளவில் உள்ள அந்த உடல்களுக்கு மூன்று விரல்கள் கொண்ட கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

வைட்டமின் மாத்திரை என்று நினைத்து ஆப்பிள் ஏர்போடை விழுங்கிய பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் !!

மூன்று விரல்கள் மற்றும் நீளமான தலைகள் கொண்டதாகக் கூறப்படும் அந்த சடலங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் பெருவின் குஸ்கோவில் இருந்து மீட்டெடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. இது மீண்டும் ஒருமுறை வேற்று கிரக உயிரினங்களின் நடவடிக்கை பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த நிகழ்வை முன்னின்று நடத்திய பத்திரிகையாளர் மற்றும் யூஃபாலஜிஸ்ட் (Ufologist) ஜெய்ம் மௌசன், இந்த இரண்டு பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் "நமது நிலப்பரப்பு பரிணாமத்தின்" ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும், அவற்றின் DNAவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு "இதுவரை வகைப்படுத்தப்படாத" ஒன்று என்றும் சாட்சியமளித்துள்ளார். 
   
மௌசன், அந்த வேற்றுகிரகவாசிகளின் சடலங்களை வெளியிடுவதற்கு முன், "UFO-க்கள் மற்றும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளின்" பல வீடியோக்களை அமெரிக்க அதிகாரிகள் மற்றும் மெக்சிகன் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த மாதிரிகள் நமது நிலப்பரப்பின், பரிணாமத்தின் ஒரு பகுதி அல்ல என்றும், இவை யுஎஃப்ஒ இடிபாடுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் அல்ல என்றும் மாறாக அவை டயட்டம் (பாசி) சுரங்கங்களில் காணப்பட்டன, பின்னர் அவை புதைபடிவமாக்கப்பட்டன, "என்று மௌசான் கூறியதாக இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. .

மேலும் அந்த சடலங்களின் எக்ஸ்-கதிர்களும் காட்டப்பட்டன, அதில் ஒஸ்மியம் போன்ற அரிய உலோக உள்வைப்புகளுடன், அந்த உடல்களின் ஒன்றில் "முட்டை" போன்ற ஒரு அமைப்பு இருப்பதை அது காட்டியது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. மௌசான், ஏற்கனவே சில முறை வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடித்ததாக கூறியுள்ளார், ஆனால் பின்னர் அவை மனித குழந்தைகளின் உடல்கள் என்று அறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Singapore President விடைபெற்றார் ஹலிமா... சிங்கப்பூரின் 9வது அதிபராக இன்று பதவியேற்கிறார் தர்மன் சண்முகரத்னம்!

Follow Us:
Download App:
  • android
  • ios