அசுர வேகத்தில் கூட்டத்திற்குள் புகுந்த கார்... 6 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு..!
சீனாவில் இன்று அதிகாலை அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உடல் நுசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரை தாறுமாறாக ஓட்டிய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

சீனாவின் ஹூபே மாகாணம் ஜாவ்யாங் நகரில் இன்று அதிகாலை பொதுமக்கள் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு மற்றும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் காரை நிறுத்தவில்லை. இதனையடுத்து போலீசார் காரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் காருக்குள் இருந்த நபர் கொல்லப்பட்டார். கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில், தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் கோபத்தை பொதுமக்கள் மீது காட்டும் போக்கு சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. சில நபர்கள் தங்கள் தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் மனரீதியிலான அழுத்தங்களால் கத்தி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் குறிப்பாக பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சென்று தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.