விபத்தில் சிக்கிய திருமண கோஷ்டி... இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்... 20 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் 2 சொகுசுக் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் 2 சொகுசுக் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் மாநில தலைநகர் அல்பேனி அருகேயுள்ளது சோஹரி. திருமண கோஷ்டியை ஏற்றிக்கொண்டு ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு கார் எதிர்பாராத விதமாக திருமண கோஷ்டியை ஏற்றி வந்த கார் மீது மோதியது. மேலும் உணவு விடுதி மற்றும் ஷாப்பிங் மையத்தில் இருந்து வெளியே வந்த கூட்டத்தின் மீதும் அந்த கார் மோதியுள்ளது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்து காவல்துைற தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
திருமண கோஷ்டியினரின் வாகனம் மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக இறங்கி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில் பயணித்தோர் மட்டுமின்றி, அப்பகுதியில் நடந்து சென்றோரும் கூட உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.