Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஒரு நாள் கூட பொறுக்க முடியாது.. சொன்னபடி வெளியேறி விடு.. அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை.

வேகவேகமாக வெளிநாட்டவர்களை ஆப்கனை விட்டு வெளியேறி வரும் நிலையில்,  காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க குடிமக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்தும், அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது குறித்தும் மேலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் கால அவகாசம் கோரும் 

Cant stand even one day .. Leave as told .. Taliban warn US.
Author
Chennai, First Published Aug 23, 2021, 7:09 PM IST

அமெரிக்கா 31 ஆம் தேதிக்குள் தனது படைகளுடன் காபுலை விட்டு வெளியேறாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற 31 தேதி வரை அவகாசம் பெற்றுள்ள நிலையில், மேலும் அவகாசம் தேவைப்படலாம் என அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்க படை, தலிபான்களை அடித்து நொறுக்கியது, தலிபான்களின் ஆட்சி நீங்கி அங்கு  ஜனநாயகம் மலர்ந்தது முதல், கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்தன. இதற்காக அமெரிக்கா கொடுத்த விலை மிக அதிகம். எனவே ஜோ பிடன் அதிபராக பொறுப்பேற்றுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அமெரிக்க துருப்புக்கள் படிப்படியாக ஆப்கானிஸ்தானிலிருந்து குறைக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்ற தொடங்கினர். இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி விட்டதாக  பிரகடனப்படுத்திய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Cant stand even one day .. Leave as told .. Taliban warn US.

 

தலிபான்கள் இடம் ஆப்கனிஸ்தான் விழுந்ததை அடுத்து நாட்டை விட்டு வெளியேற முயற்சியில் ஆப்கன் மக்கள் காபுல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். அதேபோல் ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் வெளியேறும் வரை அமெரிக்க துருப்புகள்  ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் என ஜோ பிடன் அறிவித்தார். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் என்றும், அதற்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் அவசரகதியில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களது தூதரகங்களை மூடிவிட்டு தங்களது குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகின்றனர்.மொத்த அமெரிக்க துருப்புகளும் ஆப்கனில் இருந்து வெளியேறிய பின்னரே ஆட்சி அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Cant stand even one day .. Leave as told .. Taliban warn US.

வேகவேகமாக வெளிநாட்டவர்களை ஆப்கனை விட்டு வெளியேறி வரும் நிலையில்,  காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க குடிமக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்தும், அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது குறித்தும் மேலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் கால அவகாசம் கோரும் முடிவில் அதிபர் பிடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தலிபான்களை மிகுந்த எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள தலிபான்கள், அமெரிக்கா தனது கெடுவை நீட்டிக்கும் பட்சத்தில் அது கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், அது ஆப்கனிஸ்தானில் காலநீட்டிப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios