பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் அரிய காட்சி! ஆஸி., கடற்கரையில் நிகழ்ந்த அபூர்வ சம்பவம்!
ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள கடற்கரையில் டுகைட் பாம்பு தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு பாம்பை விழுங்கும் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பாம்பு மற்றொரு பாம்பையே இரையாக விழுங்கும் அபூர்வமான சம்பவம் நடந்துள்ளது. அந்தக் காட்சியை அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த ஒருவர் பதிவுசெய்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா நாட்டில் மேற்குப் பகுதியில் பின்னிங்அப் கடற்கரை உள்ளது. அந்தக் கடற்கரையில் கோடி கிரீன் என்பவர் சென்றிருக்கிறார். அவர் கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்த வினோதமான காட்சியைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டார். இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருந்த காட்சியை அவர் கண்டார்.
பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்ற அவர் நினைத்தார். அந்தக் காட்சியை அப்படியே படம்படிக்க எண்ணி தன் மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். கோடி கிரீனுக்கு பின்னர்தான் அந்தச் சம்பவம் பற்றிய உண்மைத் தகவல் தெரியவந்தது.
அவர் கண்ட பாம்புகள் பின்னிப் பிணைந்த காட்சி இரண்டு பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் தருணம் அல்ல; கிரீன் பார்த்தபோது இரண்டு பாம்புகளில் ஒன்று மற்றொன்றை விழுங்கிக்கொண்டிருந்தது. அவை இரண்டும் டுகைட் என்னும் வகையைச் சேர்ந்த கொடிய நச்சுப் பாம்புகள். இந்த வகையான பாம்புகள் தன் இனத்தைச் சேர்ந்த பாம்பையே கொன்று உண்ணும் இயல்பு கொண்ட கானிபல் என்னும் வகையைச் சேர்ந்தவை.
இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு
இந்தப் பாம்புகள் தனது இரையைக் கொத்தி செயலிழக்கச் செய்தபின் அதன் உடலில் சுற்றி நெருக்கிக் கொல்லும். இரை இறந்ததும் முழு உடலையும் அப்படியே விழுங்கிவிடும். தன் அளவில் உள்ள மறொற்றொரு பாம்பையும்கூட லாகவமாக விழுங்கிச் செரித்துவிடும் தன்மை கொண்டவை இந்தப் பாம்புகள்.
இந்தத் தகவல் தெரிந்ததும் கோடி கிரீன் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பாம்பை மற்றொரு பாம்பு விழுங்கும் அபூர்வக் காட்சியை படம்பிடித்ததற்காக கோடி கிரீனுக்கு நெட்டிசன்களின் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
பெரிய அளவுக்கு வளரக்கூடிய இந்தப் பாம்பு அதிக நச்சுத்தன்மை விஷத்தையும் கக்கக்கூடியதாகவும் இருப்பதால் டுகைட் வகை பாம்புகள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் டுகைப் பாம்புகள் அதிகம் காணப்படுகின்றன. அங்கு உள்ள மருத்துவமனைகளில் பாம்புக்கடியால் சிகிச்சை பெற வருபவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் டுகைட் பாம்புக்கடிக்கு ஆளானவர்கள். ஆனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதில்லை.
உலகின் மிக நீளமான நாக்கைக் கொண்ட மனிதர்! நாக்கால் ஜெங்கா விளையாடி சாதனை!