24 பெண்களை திருமணம் செய்து கொண்டு 149 குழந்தைகளைப் பெற்றெடுத்த கிறிஸ்தவ மத தலைவர் ஒருவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனடா நாட்டில், பலதார திருமணங்களுக்கு தடை இருந்து வருகிறது. ஆனால், தடையை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராக உள்ள வின்ஸ்டென்ட் பிளாக்மோர், பலதார மணம் புரிந்துள்ளார். அரசின் தடையையும் மீறி 24 பெண்களை அவர் திருமணம் செய்துள்ளார். 

வின்ஸ்டென்ட் பிளாக்மோர், இளம் வயதிலிருந்தே திருமணம் செய்து கொள்ளத் தொடங்கி சமீப காலம் வரை தொடர்ந்து திருமணம் செய்து வந்துள்ளார். அவர் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் 15 வயதுடைய சிறுமியர்களே.

24 மனைவிகள் மூலம், வின்ஸ்டென்ட் பிளாக்மோருக்கு 149 குழந்தைகள் உள்ளனர். பலதார திருமணம் செய்தது தொடர்பாக வின்ஸ்டென்ட் மீது பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வின்ஸ்டென்ட்டை 6 மாத காலத்துக்கு வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. வின்ஸ்டென்ட் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.