தமிழர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் நிலையில் கனடாவில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அந்த நாட்டை கட்டமைத்ததிலும், நாட்டுப் பற்றுடன் இருப்பதிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என கூறப்படுகிறது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, தமிழர்களின் உணர்வுகள், கலாச்சாரம், பாராம்பரியம் போன்றவற்றை மதித்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

அது மட்டுல்லாமல் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் தினத்தை முன்னிட்டு வாழ்த்து சொல்லி வருகிறார். அழகான தமிழில் வாழ்த்து சொல்லி வருவதுடன், தமிழ்ர்களின் கொண்டாட்டங்களிலும்  தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் கனடாவில் தமிழர்கள் கொண்டாடிய  பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, தமிழ் இளைஞர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார்.

தமிழ் சகோதரர்களுடன் சேர்ந்து அவர் சிலம்பம் விளையாடிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் 2105 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.