மோடி மாதிரி முடியுமா..? யுடர்ன் அடித்து புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்..!

 குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு, இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து, 29 மில்லியன் டோஸ்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், டிரம்ப், மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார்.
 

Can Modi ..? Trump who praised the US

இந்தியா, கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்னும் மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி கருத்து கூறியுள்ளார் டிரம்ப்.Can Modi ..? Trump who praised the US

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு, இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து, 29 மில்லியன் டோஸ்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், டிரம்ப், மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் பல லட்சம் டோஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. 29 மில்லியன் டோஸ்களுக்கு மேல். நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். அவரிடம் இந்த மருந்தை அனுப்பச் சொல்லிக் கேட்டேன். அவர் கிரேட். அவர் ரியலி குட்,” என்று ஃபாக்ஸ் செய்திச் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் டிரம்ப். Can Modi ..? Trump who praised the US

முன்னதாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, ஏற்றுமதி செய்யாமல் இருக்குமென்றால் நான் ஆச்சரியப்படுவேன். அவர்தான் அது குறித்து என்னிடம் சொல்ல வேண்டும். நான் பிரதமர் மோடியிடம், ஞாயிற்றுக் கிழமை கூட பேசினேன். அப்போது எங்களின் மருந்துகள் வருவதை அனுமதிப்பதற்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் தற்போது மருந்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அவர் சொன்னால் பரவாயில்லை. அதே நேரத்தில், அதற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்விவகாரம் குறித்துப் பேசினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios