டிரம்பின் புதிய குடியுரிமைச் சட்டத்தால் குறைபிரசவம் செய்கிறார்களா இந்திய கர்ப்பிணிகள்; கிளம்பும் எதிர்ப்பலை!!
127 ஆண்டுகள் பழமையான அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவருக்காவது குடியுரிமை அல்லது கிரீன் கார்டு இல்லையெனில், பிப்ரவரி 20-க்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லை. இந்த மாற்றம் H1-B விசா உள்ளிட்ட தற்காலிக விசாக்களில் உள்ளவர்களைப் பாதிக்கும்.
பிறப்புரிமை குடியுரிமைச் சட்டம் 127 ஆண்டுகள் பழமையான அரசியலமைப்பு சட்டமாகும். இந்த திட்டத்தில் தற்போது திருத்தம் கொண்டு வந்து இருப்பது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தற்போது அமலில் இருக்கும் சட்டத்தில் பெற்றோரில் இருவருக்குமே குடியுரிமை இல்லாவிட்டாலும், அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையை உறுதி செய்கிறது. இதுவரை இந்த சட்டம் தான் அமலில் உள்ளது.
டொனால்ட் டிரம்பின் புதிய உத்தரவுக்குப் பின்னர் H1-B விசாக்களில் இருக்கும் கர்ப்பிணி இந்தியப் பெண்கள், தங்கள் குழந்தைகளின் முன்கூட்டிய பிரசவத்தை உறுதி செய்வதற்காக சிசேரியன் செய்வதற்குக் கூட தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதை மருத்துவமனைகளின் மருத்துவர்களும், செவிலியர்களும் உறுதி செய்துள்ளனர்.
எப்போது குடியுரிமை இழப்பு?
அதாவது, டிரம்பின் புதிய ஆணை வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது. அந்த தேதிக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு தகுதியாகிறார்கள். பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பின்னர் பிறக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது. இதற்கும் ஒரு நிபந்தனை உள்ளது. குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது ஏற்கனவே குடிமகனாகவோ அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவராகவோ இருந்தால் மட்டுமே அவர்கள் குடிமக்களாக மாறுவார்கள். இல்லையென்றால், அவர்கள் 21 வயது அடையும் போது அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியர்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து பணிக்காக சென்று இருப்பவர்களை பாதிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவிடம் போய் வாங்கிக்கோங்க! அமெரிக்காவிற்கு முதல் நாளே கனடா வைத்த செக்.. டிரம்பிற்கு வந்த சோதனை !
பாதிக்கப்படும் இந்தியர்கள்:
H-1B போன்ற தற்காலிக வேலை விசாக்கள் அல்லது H-4 போன்ற ஒருவரை சார்ந்து விசா பெற்று சென்று இருக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் இனி குடியுரிமையை இழப்பார்கள். அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு காத்திருக்கும் இந்தியர்களுக்கும் இது பெரிய இடியாக இறங்கியுள்ளது.
அட்டார்னி ஜெனரல்கள் எதிர்ப்பு:
டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து, அமெரிக்காவில் இருக்கும் 22 மாநிலங்களின் அட்டார்னி ஜெனரல்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதாக டொனால்ட் டிரம்ப் கூறினாலும், இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் பூகம்பம் கிளம்பி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
Washington White House | வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் என்ன இருக்கு ? அறிந்திராத உண்மைகள்!