Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூர் வாசிகளே.. உயரும் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்கள் - எவ்வளவு, எப்போது உயரப்போகிறது தெரியுமா?

சிங்கப்பூரில், பெரியவர்களுக்கான பேருந்து மற்றும் ரயில் கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளது. சிங்கப்பூரின் பொது போக்குவரத்து கவுன்சில் (Public Transport Council) இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Bus and Train Ticket Fare getting increased in Singapore Public Transport Council ans
Author
First Published Sep 18, 2023, 9:50 PM IST

வெளியான அறிக்கையின்படி வருகின்ற டிசம்பர் 23, 2023 முதல், பயணிகளின் பயண தூரத்தைப் பொறுத்து, பேருந்து மற்றும் ரயில் பயணங்களுக்கான (பெரியவர்களுக்கான) கட்டணம் 10 முதல் 11 சென்ட் (சிங்கப்பூர் டாலர்) வரை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4.2 கிமீ அல்லது அதற்கும் குறைவான பயணங்களுக்கு, S$0.10 அதிகமாகச் செலுத்த நேரிடலாம் என்றும், 4.2 கிமீக்கும் அதிகமான பயணங்களுக்கு S$0.11 அதிகமாகச் செலுத்த நேரிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்த கட்டண உயர்வு என்பது 6 முதல் 7 ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் திண்டாடிய அமெரிக்க போர் விமானம் திடீர் மாயம்!

சிங்கப்பூரின் பொது போக்குவரத்து கவுன்சில் (PTC) தனது வருடாந்திர கட்டண மறுஆய்வு பயிற்சியின் (FRE) முடிவிற்குப் பிறகு இன்று செப்டம்பர் 18ம் தேதி அன்று இந்த கட்டண உயர்வுகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கட்டணத்தில் சலுகை பெறுபவர்களுக்கும் கட்டண உயர்வு. 

சிங்கப்பூரில் உள்ள மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு, தற்போது அவர்கள் அனுபவிக்கும் சலுகைக் கட்டணங்களுக்கு, கட்டண உயர்வு S$0.04 முதல் S$0.05 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் பயணத்தின் தூரத்தைப் பொறுத்து அது மாறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்குறியதை போல 4.2 கிமீ அல்லது அதற்கும் குறைவான பயணங்களுக்கு, S$0.04 அதிகரிப்பும், 4.2கிமீக்கும் அதிகமான பயணங்களுக்கு S$0.05 சென்ட் அதிகரிப்பும் இருக்கும். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த கட்டண உயர்வு என்பது 4 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல சிங்கப்பூரில் பணிபுரியும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்கு உள்ள சலுகைக் கட்டணங்களுக்கும் இந்த மாற்றங்கள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

67 லட்சம் போச்சு! கூகுள் ஊழியரின் உல்லாச வாழ்க்கையில் மண் அள்ளி போட்ட கிரிப்டோகரன்சி!

Follow Us:
Download App:
  • android
  • ios