தங்கையை கற்பழித்து கொன்ற அண்ணன்! 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை...
பாகிஸ்தானில் தனது 13 வயது தங்கையை கற்பழித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் பலுசிஸ் தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் கில்லி இஸ்மாயில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சிறுமியின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவளது அண்ணன் கூறும்போது, தான் வெளியே சென்று விட்டு 30 நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்த போது தனது தங்கை துப்பட்டாவில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாள் என தெரிவித்தார்.
இதற்கிடையே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனையில் அவள் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே போலீசார் வேறு கோணத்தில் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தனது தங்கையை கற்பழிக்க முயற்சித்ததாகவும், அவள் மறுக்கவே கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்தான்.
ஆனால், அவள் கொலை செய்யப்படும் முன்பே கற்பழிக்கப்பட்டதாக போலீஸ் துறை டாக்டர் நூர்பலோச் தெரிவித்துள்ளார்.
எனவே தனது தங்கையை கற்பழித்து கொலை செய்த காமூக அண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவனது ரத்தம் மாதிரிகளை லாகூருக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.