நான் ஒரு இந்துவாக மொராரி பாபுவின் ராம் கதா நிகழ்வில் கலந்து கொண்டேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பெருமிதம்!!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கேம்பிரிட்ஜில் மொராரி பாபுவின் ராம் கதாவில் கலந்து கொண்டார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்மீக போதகர் மொராரி பாபுவின் 'ராம் கதா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நான் இங்கு பிரதமராக கலந்து கொள்ளவில்லை. ஒரு இந்துவாக கலந்து கொண்டுள்ளேன் என்றார்.
மேலும் ரிஷி சுனக் கூறுகையில், ''சுதந்திர தின நாளில் ஆன்மீக போதகர் மொராரி பாபுவின் ராமர் கதை (ராம் கதா) வாசிப்பில் நான் கலந்து கொண்டு இருப்பதை கவுரவமாகவும், சந்தோஷமாகவும் உணருகிறேன். இங்கு நான் பிரதமராக வரவில்லை. ஒரு இந்துவாக வந்து இருக்கிறேன். நம்பிக்கை என்பது வேறு. அதுதான் நம்முடைய ஒவ்வொரு வாழ்விலும் நம்மை வழி நடத்துகிறது'' என்றார். இவர் இப்படி கூறியிருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ரிஷி சுனக் மேடையில் பின்னணியில் இடம்பெற்றிருந்த ஹனுமனின் உருவப்படத்தை குறிப்பிட்டு, ''பாபுவின் பின்னணியில் தங்க ஹனுமான் இருப்பது போல, 10 டவுனிங் தெருவில் உள்ள எனது மேஜையில் ஒரு தங்க விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்'' என்றார்.
கருட பஞ்சமி 2023: கருட பஞ்சமி தேதி, நேரம், பூஜை மற்றும் விரதத்தின் முக்கியத்துவம் இதோ..!!
தனது குழந்தைப் பருவத்தில் சவுத் ஹாம்ப்டனில் இருக்கும்போது, தனது உடன் பிறந்தவர்களுடன் அருகில் உள்ள கோவிலுக்குச் செல்வதற்கு முன், தான் ஒரு பிரிட்டன் பிரஜ்ஜை மற்றும் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். எப்போதும் ஹனுமான் தனக்கு ஒரு உத்வேகத்தை அளித்து வந்ததாக கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், ''பாபு பேசும் ராமாயணத்தையும், பகவத் கீதையையும் ஹனுமான் சாலிசாவையும் நினைவுகூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன். மேலும், என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும் ராமர் எப்போதும் ஒரு உத்வேகமான நபராக இருப்பார்'' என்றார்.
ஆவணி மாதம் 2023 : முக்கிய விரதங்கள், பண்டிகை நாட்கள் என்னென்ன? முழு விவரம் இதோ
நிகழ்ச்சியில் மேடையில் நடந்த ஆரத்தியில் ரிஷி சுனக் கலந்து கொண்டார். ஜோதிர்லிங்க ராம் கதா யாத்திரையின் புனித பிரசாதமாக சோம்நாத் கோவிலில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை ரிஷி சுனக்கிற்கு மொராரி பாபு வழங்கினார்.