உண்மையிலேயே கொரோனா இப்படித்தான் இருக்குமா..?? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!!

முதல் முறையாக கொரோனா வைரஸின் விரிவான ஒளிரும் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர் மனிதனின் குடல் பகுதியில் அதிக நோய்க்கிருமிகளை அது உருவாக்குவது போலவும் அந்த படம் அமைந்துள்ளது,

British and Netherlands scientist's capture corona image in stomach

முதல் முறையாக கொரோனா வைரஸின் விரிவான ஒளிரும் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர் மனிதனின் குடல் பகுதியில் அதிக நோய்க்கிருமிகளை அது உருவாக்குவது போலவும் அந்த படம் அமைந்துள்ளது,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதுவரை 37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்துள்ளது ,  ஆனாலும்  இந்த வைரஸின் கோரத்தாண்டவம் இன்னும் ஓயவில்லை .  ஒட்டுமொத்த உலகமும் வைரஸ் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருவதுடன் ,  இதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறி  வருகிறது .  இந்த வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்  இந்த வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில்  விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், 

 

British and Netherlands scientist's capture corona image in stomach  

மற்றொருபுறம் இந்த வைரஸ் மனித உடலை எவ்வாறு தாக்குகிறது ,  அது உடலில் ஏற்படுத்துகிற மாற்றங்கள் என்ன  பாதிப்புகள் என்ன என்பது குறித்தெல்லாம் விஞ்ஞானிகள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர் .பெரும்பாலும்   தும்மல் மற்றும் இருமல் தொடுதல் மூலமாக இந்த வைரஸ் பரவும் என்றும் ,  நாசி மற்றும் தொண்டை பகுதி வழியாக நுரையீரல் மற்றும் இருதயத்தை தாக்குகிறது  என்றும் ஏற்கனவே அறியப்பட்டுள்ளது, அதேபோல் இந்த வைரஸ் குடற்பகுதிக்கு  சென்றால் அது  நொதித்தல் மூலமாக அழிந்துவிடும் என கூறப்பட்டு வருகிறது ,  இந்நிலையில் குடலில் அது ஏற்படுத்தும்  தாக்கம் குறித்து டன்டீ ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸில் உள்ள ஒரு பிரிட்டிஷ் குழு, உட்ரெச்சில் உள்ள ஹூப்ரெக்ட் நிறுவனம், ரோட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் எம்.சி பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் நெதர்லாந்தின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் ஒன்றிணைந்து  வைரஸ் குடற் பகுதியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ளனர், 

British and Netherlands scientist's capture corona image in stomach

அதில்  ஒரு சோதனைக் குழாயில் வைரஸை உருவாக்கி அதை உயிரணுக்களில் முதலில்  ஆராய்ந்தனர் அதில் அந்த வைரஸ் பரவி விரவியது, அதுமட்டுமின்றி நோய் பாதித்தவர்களை கொண்டு ஆராய்ந்ததில் அது குடல் செல்களின் ஊடுருவிப் வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ததை கண்டனர்,  எனவேதான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வயிற்றுப்போக்கு இரைப்பை குடல் அழற்ச்சி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர் என  விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் ,  மேற்கண்ட இந்த விஞ்ஞானிகள் குழு ஒரு சக்தி வாய்ந்த  நுண்ணோக்கியை கொண்டு ஆராய்ந்ததில் ஒரு நபரின் குடற் திசு மாதிரியில் சார்ஸ்-கோவி -2 துகள்கள் உருவாவதையும், வைரஸ் எவ்வாறு குடல் செல்களைச் சேகரிக்கிறது என்பதையும் படம்பிடித்துள்ளனர். இதே நேரத்தில்  வைரஸ் குடலின் செல்களைப் பாதித்து அங்கு பெருக்கக்கூடும் எனபதனை டண்டியின் பேராசிரியர் ஜேசன் ஸ்வீட்லோ தலைமையிலான குழு, கண்டுபிடித்துள்ளது குறிப்பிடதக்கது. 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios