அட்லாண்டிக் பெருங்கடலில் தத்தளித்த மீனவர்… உறைவிப்பான் பெட்டிக்குள் தஞ்சம்… 11 நாட்களுக்கு பிறகு மீட்பு!!
அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் படகு மூழ்கியதை அடுத்து பிரேசிலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிர் பிழைப்பதற்காக உறைவிப்பான் பெட்டிக்குள் இருந்த நிலையில் 11 நாட்களுக்கு பிறகு அவர் மீட்கப்பட்டுள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் படகு மூழ்கியதை அடுத்து பிரேசிலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிர் பிழைப்பதற்காக உறைவிப்பான் பெட்டிக்குள் இருந்த நிலையில் 11 நாட்களுக்கு பிறகு அவர் மீட்கப்பட்டுள்ளார். பிரேசிலைச் சேர்ந்த மீனவர் ஒருவர், பயணம் செய்த படகு அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் மூழ்கியது. இதை அடுத்து அவர் உறைவிப்பான் பெட்டிக்குள் சென்றார். உணவு, தண்ணீர் இன்றி அந்த பெட்டிக்குள் இருந்தவர் 11 நாட்களுக்கு பிறகு மாலுமிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீனாவில் மீண்டும் லாக்டவுன்.. ருத்ர தாண்டவமாடும் கொரோனா வைரஸ் - உலக நாடுகள் பீதி !
44 வயதான அவர் உயிர் பிழைப்பதற்கான முயற்சியில் படகில் இருந்த உறைவிப்பான் பெட்டியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக சுரினாம் அருகே கடலில் குளிரூட்டி மிதப்பதை கண்ட மற்றொரு படகில் இருந்த மாலுமிகள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அதனுள் மீனவர் ஒருவர் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரை மாலுமிகள் மீட்டனர். மீட்கப்பட்ட ரோட்ரிக்ஸ் என்ற பிரேசில் மீனவரிடம் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதும் இல்லாததால், அவர் சுரினாமின் தலைநகரான பரமரிபோவில் 16 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் நிலவுப் பயணம்: நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
ஆரம்பத்தில் அவர் உத்தியோகபூர்வ ஆவணங்கள் இல்லாத சட்டவிரோத குடியேற்றவாசியாக கருதப்பட்டதாகவும், பின்னர், பிரேசிலுக்குத் திரும்புவதற்கு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ததாகவும், அது அவரை பெலமுக்கு அழைத்துச் சென்றதாகவும் ரோட்ரிக்ஸ் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அவரது படகு மூழ்கிய இடத்திலிருந்து 450 கிலோமீட்டர் (280 மைல்) தொலைவில் அவர் மீட்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.