45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து... உடல் சிதறி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!
பிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் 45 அடி உயரப் பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், 45 அடி உயரப் பாலத்தில் கீழே விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து தொடர்பாக உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த புதன்கிழமை சாவோ பாலோவின் டாகுவாவில் ஒரு பேருந்து மற்றும் டிரக் மோதிக்கொண்ட விபத்தில் 42 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.