BREAKING: ஆப்கனில் மீண்டும் 'டமார்' சத்தம்.. மசூதி அருகே வெடித்த குண்டு… பலர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் உள்ள மசூதி நுழைவுவாயில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
படுகாயம் அடைந்த பலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தாலிபன் அமைப்பு செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
ஆனால் எப்படி இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, எத்தனை பேர் பலியாகினர் என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமோ, அமைப்போ பொறுப்பேற்கவில்லை.