பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம மூனீர் ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. லாகூரில், வால்டன் விமான நிலையம் மற்றும் கண்டோன்மென்ட் பகுதிக்கு அருகில் பல குண்டுவெடிப்புகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதம் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் மூனீர் ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில், குறிப்பாக வால்டன் விமான நிலையம் மற்றும் நகரின் கண்டோன்மென்ட் பகுதிக்கு அருகில் பல குண்டுவெடிப்புகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பகுதிகள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளிட்ட முக்கிய ராணுவ நிலையங்களுக்கு அருகாமையில் உள்ளன.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

ஆபரேஷன் சிந்தூர்:

புதன்கிழமை அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பதில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது.

அவற்றை இந்தியா தனது ஒருங்கிணைந்த UAS ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.