Ukraine Russia War: பிறந்த நாளை கேக் வெட்டிய கொண்டாடிய நண்பர்கள்.. போரிலும் பூத்த அன்பு பரிமாற்றம்..
Ukraine Russia War: ரூமேனியா நாட்டின் எல்லையில் அகதிகள் முகாமில் தங்கிருந்த மாணவர்களில், இந்திய மாணவன் ஒருவரது பிறந்தநாளை, இத்தகை சோகத்திற்கு மத்தியிலும் கேக் வெட்டி கொண்டாடியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா இராணுவம் தாக்குதலை தொடங்கியது. வான்வழி , தரைவழி மூலம் கடுமையான தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளது. குறிப்பாக தலைநகர் கீவ்யில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வந்தது. உக்ரைன் மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 10 லட்சத்தும் மேற்பட்ட மக்கள் போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைனில் 20,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. போர் தொடங்கிய முதல் நாளிலே ஏவுகணைகள் மூலம் தாக்குதலை ரஷ்யா நடத்தி வந்ததால் உக்ரைன் மூழுவதும் வான் பரப்பில் பயணியர் விமனம் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அண்டை நாடுகளாக போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாகியா,ரூமானியா உள்ளிட்ட நாடுகளில் தரைவழியாக இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்படுகின்றன.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்களை மீட்கும் பணியினை ஆப்ரேஷன் கங்கா எனும் பெயரில் மத்திய அரசு செய்து வருகிறது. இதில் இந்திய விமானபடையின் சி-17 விமானமும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இணைந்துள்ளனர். இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: Ukraine Russia War:முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்யா..அடுத்தடுத்த டார்கெட்டை கச்சிதமாக முடிக்கும் புதின்..
இந்நிலையில் உக்ரைனில் இருந்து வெளியேறிய மக்கள், ரூமேனியா நாட்டில் எல்லையில் அமைக்கப்பட்டு முகாமில் தங்கிருந்துள்ளனர். அந்த முகாமில் இருந்த கார்த்திக் என்ற மாணவனின் பிறந்த நாளை இந்த சோகமாக போர்சூழலிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். இதுக்குறித்தான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.