Russia Ukraine war: ஜி7 தலைவர்களுடன் வீடியோ கால்... போர் பற்றி மிகமுக்கிய கூட்டத்தில் ஜெலன்ஸ்கி..!
உக்ரைன் உடனான போரில் ரஷ்யா தோல்வி அடையாது என்பதில் ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உறுதியுடன் உள்ளார் என்று அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குநர் பில் பர்ன்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இதர ஜி7 தலைவர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்த சந்திப்பு விர்ச்சுவல் முறையில், வீடியோ கால் அழைப்பில் நடைபெறுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் ஜென் சாகி தெரிவித்து உள்ளார்.
ராணுவ உதவி:
இதோடு உக்ரைன் நாட்டிற்கு பிரிட்டன் 1.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்து இருந்தது. “விளாடிமிர் புதின் உக்ரைன் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருவதால், உக்ரைன் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருவதோடு ஐரோப்பா முழுக்க அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைத்து வருகிறது," என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து இருக்கிறார்.
உக்ரைன் உடனான போரில் ரஷ்யா தோல்வி அடையாது என்பதில் ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உறுதியுடன் உள்ளார் என்று அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குநர் பில் பர்ன்ஸ் தெரிவித்து இருக்கிறார். உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்து வருகின்றன. எனினு, டான்பாஸ் பிராந்தியத்தில் முன்னேறி வருவதை அடுத்து,
ரஷ்ய ராணுவம் உக்ரைனை நிச்சயம் தோற்கடிக்கும் என்ற கருத்தில் புதின் தீர்க்கமாக உள்ளார் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இருமடங்கு அதிகரிப்பு:
உக்ரைனுக்கு போர் துவக்கத்தில் வழங்கிய உதவிகளை தற்போது இருமடங்கு வரை அதிகரிக்க பிரிட்டன் உறுதி அளித்து இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய ஐரோப்பிய மோதலாக கருதப்படுகிறது.
இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாக உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் ரஷ்யா தனது தாக்குதல்களை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக உக்ரைன் தலைவர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.