முன்னாள் காதலனை வெறுப்பேற்ற மாட்டிறைச்சி பார்சலை அனுப்பிய சீக்கிய பெண்ணுக்க 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

லண்டன் சுவிண்டன் நகரைச் சேர்ந்தவர் சீக்கிய பெண், கடந்த சில வருடங்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. கலாச்சார வேறுபாடு என்ற காரணத்தைக் கூறி அந்த இளைஞர் பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.

இதனால் அந்த சீக்கியப் பெண் பெரும் ஆத்திரமடைந்தாள். முன்னாள் காதலனின் தாய், தந்தை, சகோதரி ஆகியோரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீடு, காரை அடித்து நொறுக்கப்பவதாக அந்த மிரட்டி வந்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆத்திரம் அடங்காத அந்த பெண், அவ்வப்போது மாட்டிறைச்சி பார்சலையும் அனுப்பி வெறுப்பேற்றி வந்துள்ளார். இதனால், பொறுமை இழந்த அந்த நபர், சுவிண்டன் நீதிமன்றத்தில் சீக்கிய பெண் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சீக்கிய பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.