உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான சூப் எது தெரியுமா? சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லி சூப். இதன் விலையைக் கேட்டால் உங்கள் தலைச் சுற்றிவிடும்.
உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான சூப் எது தெரியுமா? சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லி சூப். இதன் விலையைக் கேட்டால் உங்கள் தலைச் சுற்றிவிடும். ஆமாம், இதன் ஒரு கிண்ண விலை 1,37,277 ரூபாய்! ‘ஹாவோஸோங்ஹாவோ பீஃப் நூடுல் சூப்’ என்ற பெயரில் இயங்கும் உணவகத்தில்தான் உலகின் விலை மிகுந்த சூப் விற்பனை ஆகிறது.
இந்த விலை உயர்ந்த சூப்பில் அப்படி என்ன இருக்கிறது? “உலகிலேயே விலை அதிகமுள்ள 12 பொருட்கள் இதில் உள்ளன. இதில் 4 பொருட்கள் வானிலிருந்தும் 4 பொருட்கள் நிலத்திலிருந்தும் 4 பொருட்கள் கடலிலிருந்தும் பயன்படுத்துகிறோம். தலைசிறந்த 12 சமையல் கலைஞர்கள்தான் சூப்பை தயாரிக்கிறார்கள். உணவகத்துக்கு வந்தவுடன் சூப் ஆர்டர் செய்து சாப்பிட முடியாது. ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லி வைக்க வேண்டும். தேவையைப் பொறுத்தே சூப்புக்கு வேண்டிய பொருட்களைத் தயார் செய்வோம்.
அதனால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது. அதேபோல் செலவும் அதிகம் ஆகிறது. அதனால்தன் சூப்பின் விலை 1,37,277 ரூபாய்” என்கிறார் உணவகத்தின் மேலாளர் யான். இங்கே வரும் வாடிக்கையாளர்கள், மெனுவில் சூப்பின் விலையைக் கண்டதும் அதிர்ச்சியடைகிறார்கள். பிறகு, தவறுதலாக அச்சாகியிருப்பதாக நினைத்து ஆறுதலடைகிறார்கள்.
அந்த சூப்பை ஆர்டர் செய்யும்போதுதான், மெனுவில் உள்ள விலை உண்மையானது என்பதை அறிகிறார்கள். உடனே மெனுவைப் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி, சூப்புக்கு இலவச விளம்பரம் தேடித் தந்துவிடுகிறார்கள். இந்த உணவகத்தின் சூப்புக்கு அடுத்த இடத்தில் இருப்பது தைவானின் ‘நு பா பா’ உணவகத்தின் சூப்தான். இதன் விலை 22,732 ரூபாய்!
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 9, 2019, 5:54 PM IST