இங்கிலாந்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘அசைவ’ நோட்டுகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் ரூபாய் நோட்டுகள் பவுண்டுகளாக மதிப்பிடப்படுகின்றன. தற்போது புதிதாக 5 பவுண்ட் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இங்கிலாந்து வங்கி அறிமுகம் செய்துள்ள இந்த நோட்டு சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இதில் மாட்டிறைச்சி கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மெழுகுவர்த்தி, சோப்புகள் பயன்படுத்தப்படும் இறைச்சி கொழுப்பை கையால் தொட மாட்டோம் என இங்கிலாந்தில் வசிக்கும் சைவ பிரியவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மாட்டிறைச்சி கொழுப்பு பயன்படுத்தப்பட்ட கரன்சியை வாபஸ் பெறுங்கள்’ என்ற தலைப்பில் இதற்காக தனி போராட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 12 ஆயிரம் பேர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

தொடர்ந்து கையெழுத்து வேட்டை நடந்து வருகிறது. 15 ஆயிரம் பேர் கையெழுத்திட்டதும், இங்கிலாந்து வங்கியிடம் இந்த மனு ஒப்படைக்கப்படும் என போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கரன்சியில் மாட்டு கொழுப்பு பயன்படுத்தப்பட்ட சம்பவத்தினால் சைவ பிரியர்கள், அதனை வாங்க தவிர்த்தும் வருகின்றனர்.