மோடியுடன் காட்டுக்குள் பயணம் செய்த பியர்ல் கிரில்ஸின் பரிதாப நிலை... என்ன நடந்தது தெரியுமா..?
டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி தொகுப்பாளரான பியர் கிரில்ஸின் முகத்தில் தேனீ ஒன்று தாக்கி அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப்போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி தொகுப்பாளரான பியர் கிரில்ஸின் முகத்தில் தேனீ ஒன்று தாக்கி அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப்போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்னும் நிகழ்ச்சி உலகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் அடர்ந்த காடுகளில் சிக்கிக்கொண்டால் உயிர் பிழைத்து அங்கிருந்து எப்படித் தப்பித்து வர வேண்டும் என பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். கடுமையான இடங்களுக்கும் சென்று அவர் காட்டு விலங்குகள், விஷப்பூச்சிகளையும் கடந்து வருவார். அப்போது விஷப்பூச்சிகளை உயிரோடு உட்கொள்வார்.
இந்நிலையில் பியர் கிரில்ஸின் முகத்தில் தேனீ தாக்கி சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு ஒன்றில் புதிய நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக பியர் கிரில்ஸ் சென்றுள்ளார். அப்போது அந்த தீவில் கொடிய விஷதன்மையுடைய தேனீ ஒன்று அவரின் முகத்தில் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீயால் தாக்கப்பட்டு முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கியுள்ள பியர் கிரில்ஸின் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் உத்தரகாண்டில் உள்ள காட்டுப்பகுதியில் பிரதமர் மோடியுடன் தயாரான நிகழ்ச்சி வெளியாகி பிரபலமானது. இந்நிலையில் பியல் கிரில்ஸ் தேனியிடம் கொட்டு வாங்கி அடையாளமே மாறிப்போயுள்ளார்.