காட்டுக்குள் மோடி இப்படியெல்லாமா நடந்து கொண்டார்..? ரகசியங்களை போட்டுடைத்த டிஸ்கவரி பியர்ஸ் கிரில்ஸ்..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நிகழ்ச்சி நடத்தியதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன் என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி, உலகம் முழுவதும் அனைவரது கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், அபாயகரமான உயிரினங்களை உயிரோடு உண்ணுவதில் திறமையானவர்.
யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்தும், அருவியில் குதித்து, மலைகளில் ஏறி என பார்பவர்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்பவர். அந்நிகழ்ச்சியில் வரும் பியர் கிரைல்ஸ் உடன் மோடி காட்டுக்குள் பயணம் செய்யும் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
பிரதமர் மோடியுடனான அனுபவம் குறித்து பியர் கிரைல்ஸ் கூறுகையில் "சில ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமாவை அலாஸ்காவுக்கு அழைத்துச் செல்லும் அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப் போன்றது தான் தற்போது கிடைத்ததும். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், இருவருமே சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலே ஒபாமா மற்றும் மோடியுடன் பயணம் செய்துள்ளேன்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப்பூங்காவில் காட்டுக்குள் சென்றோம். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மிகவும் அமைதியாக இருந்தார். தைரியமாகவும் இருந்தார். அவரை அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம். காட்டுக்குள் பயணம் செய்யும் போது பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் யோசிப்பார்கள். ஆனால், பிரதமர் மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார். அவருடைய உடையில் அவர் மிகவும் அழகாக தெரிந்தார்.
பயணம் சற்று கடினமாகவே இருந்தது. பெரிய கற்கள், கரடு முரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. உலகத் தலைவர் ஒருவருடனான பயணம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. பிரதமர் என்பதை மறந்து அவர் மிகவும் சாதரணமாக பயணித்தார். எப்போதுமே அவரது முகத்தில் புன்னகை இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.